ஆசிரியர் சங்கம் நாளை போராட்டம்: த.தே.கூட்டமைப்பு மற்றும் த.தே.ம முன்னணி ஆதரவு

401

ஆசிரியர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்புக்கள் கவனயீனமாக இருப்பதனைக் கண்டித்து நாளை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர் தினமான நாளை யாழ்.நகரில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்துவது மட்டுமல்லமல், மாணவர்களுடைய எதிர்காலத்திற்கான அத்திபாரத்தையும் இடும் ஆசிரியர்கள் சமகாலத்தில் பல்வேறு விதமான நெருக்குவாரங்களை எதிர் கொள்கின்றார்கள்.

அவர்களுடைய நலன்கள் தொடர்பில் அரசாங்கமும் பொறுப்புவாய்ந்த தரப்பு க்களும் கவனயீனமாகவே இருக்கின்றனர்.

எனவே சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6ம் திகதி யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆசிரியர்களின் உரிமைகளுக்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் பிற்பகல் 2மணிக்கு குறித்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன, தங்கள் முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளன.

அத்துடன் குறித்த போராட்டத்தில் சகல வேற்றுமைகளையும் கடந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வியலாளர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என மேற்படி இரு கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE