புற்றுநோய் செல்கள் உருவாகும் விதம் மற்றும் அவை எவ்வாறு மனித உடலில் பரவுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.
மனிதர்களின் செயல்பாட்டை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவது டி.என்.ஏ (Dioxy rebonuclic acid – டியாக்ஸிரிபோ நியூக்லிக் ஆசிட்) என்பதன் சுருக்கமே டி.என்.ஏ
ஒருவரின் செயல் மற்றும் விருத்தியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக டி.என்.ஏ. விளங்குகிறது. பெற்றோர்களின் பண்புகள் அவர்களது வாரிசுகளுக்கு வருவதற்கு டி.என்.ஏ. முக்கிய பங்காற்றுகிறது.
தற்போது, சேதமடைந்த டி.என்ஏக்கள் மூலம் புற்றுநோய் செல்கள் உருவாகின்றன என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
டொராண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் கரீம் மெக்கெயில் இதுகுறித்து கூறியதாவது, சேதமடைந்த டி.என்ஏக்கள் உடலில் உள்ள சில குறிப்பிட்ட செல்களுக்குள் செல்கின்றன.
மோட்டார் காம்ளக்ஸால் புரோட்டினால்(motor protein complex) ஆன அந்த செல்கள், சேதமடைந்த டிஎன்ஏக்களை சரிசெய்கின்றன.
சரி செய்யப்பட்ட டி.என்.ஏக்கள் தங்களது இயல்புக்கேற்ப பல்கிப் பெருகும்.
அதேசமயம், அதில் செல் குறிப்புகள் சரிவர இருக்காது. இதனால்தான் புற்று நோய் ஏற்படுகிறது என்று சந்தேகிக்கிறோம்.
சேதமடைந்த டி.என்.ஏக்களைக் கொண்ட செல்கள் வழக்கம் போல பெருகி வந்தாலும் கூட அதில் வளர்ச்சி முறையாக இல்லாமல் போவதால் அவை புற்றுநோயாக மாறுகின்றன.
மேலும் குரோமோசோம்கள் உடையும்போதும், சரி செய்யப்படாமல் போகும்போதும் புற்று நோய் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.