ஆடு ஜீவிதம் படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

128

 

மலையாள திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ஆடு ஜீவிதம்.

உண்மையாக நடந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தை பிரபல இயக்குனர் பிளஸ்ஸி இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து அமலா பால் ஜோடியாக நடித்திருந்தார்.

வசூல்
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. கண்டிப்பாக இப்படத்திற்காக பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பிளஸ்ஸிக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறப்படுகிறது.

இப்படம் வெளிவந்த மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 49 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

SHARE