ஆட்டம் காட்டிய வங்கதேசத்திற்கு ஒரே ஓவரில் செக் வைத்த ஹசரங்கா

107

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் சவுமியா சர்க்கார் அரைசதம் விளாசினார்.

சவுமியா சர்க்கார் 68
சாட்டோக்ராமில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லித்தன் தாஸ் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார்.

தில்ஷன் மதுஷன்கா வீசிய பந்தில் துனித் வெல்லாகேயிடம் கேட்ச் கொடுத்து லித்தன் தாஸ் ஆட்டமிழந்தார். ஆனால் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ மற்றும் சவுமியா சர்க்கார் கூட்டணி 75 ஓட்டங்கள் குவித்தது.

ஷாண்டோ 39 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். எனினும் சவுமியா சர்க்கார் இலங்கை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

தனது 12வது அரைசதத்தை பதிவு செய்த அவர் சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டினார். இதன்மூலம் வங்கதேசம் அணி 21 ஓவர்களில் 130 ஓட்டங்கள் குவித்தது.

ஹசரங்கா மிரட்டல்
22வது ஓவரை வீசிய ஹசரங்கா வங்கதேசத்தின் வேகத்திற்கு செக் வைத்தார். அந்த ஓவரில் சவுமியா சர்க்கார் 66 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மஹ்மதுல்லா 2 பந்துகளில் சந்தித்த நிலையில், அதே ஓவரில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் அதிரடி காட்டிய ரஹீம் 25 (28) ஓட்டங்களில் ஹசரங்கா ஓவரில் lbw முறையில் ஆட்டமிழந்தார். அதே போல் ஹசரங்கா ஓவரில் மெஹதி ஹசன் (12) வெளியேறினார்.

இதன்மூலம் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வங்கதேசத்தின் அதிரடி ஆட்டத்திற்கு முட்டுக்கட்டைபோட்டார்.

 

SHARE