ஆண்களை மயக்க அப்படி கிளாமர் டிரஸ் போடுறேனா.. பிக் பாஸ் மாயா கொடுத்த விளக்கம்

78

 

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாயா.

இவர் கமலின் விக்ரம், விஜய்யின் லியோ போன்ற படங்களில் கேமியோ ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்
சமீபத்தில் பேங்காக் சென்றுள்ள மாயா அங்கு அவர் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனால் சிலர், ஆண்களை மயக்க தான் இப்படி கவர்ச்சியான ஆடைகளை போட்டு இணையத்தில் பகிர்கிறீர்களா என்று கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

இதற்கு மாயா, இங்கே இருக்கும் எல்லா பெண்களும் மற்றவர்களை கவரவும் நல்லா தெரியவும், கிளாமராக தெரியனும் என்பதற்காக கிளாமர் ஆடைகளை போடுவது கிடையாது. அவர்களுக்கு என்ன விருப்பமாக இருக்கிறதோ அதை போடுகிறார்கள்.

பிகினி உடை மினி ஸ்கெர்ட் அணிவதால் அது ஆபாசம் என்று அர்த்தம் கிடையாது. இந்த சமூகத்தில் என்ன சொன்னாலும் உங்கள் காதில் கேட்டுக்கொள்ளாமல் உங்களுக்கு என்ன பிடித்த ஆடையை அணியுங்கள் என்று மாயா தெரிவித்து இருக்கிறார்.

SHARE