ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் உலவும் 25 மோசடி செயலிகள்: சைபர் பாதுகாப்பு மெக்கஃபீ எச்சரிக்கை

137

 

ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் உள்ள 25 மோசடி செயலிகளை சைபர் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபீ கண்டறிந்துள்ளது.

ஸாமால்சியஸ்
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களில் உள்ள ப்ளே ஸ்டோரில் 25 மோசடி செயலிகள் இருப்பதை மெக்கஃபீ (McAfee) கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தகைய ஆண்ட்ராய்டு செயலிகளை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு ப்ளே ஸ்டோரில் இரட்டை வேடமிட்டு நுழைந்த செயலிகளை “ஸாமால்சியஸ்” என அழைக்கப்படுகிறது, இந்த ஸாமால்சியஸ் செயலிகள் மொத்தமாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 300 ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இந்த செயலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மோசடி செயலிகள்
கீழே அடையாளம் காணப்பட்ட செயலிகள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனடியாக அதனை நீக்க விடுங்கள் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எசன்சியல் ஹாரோஸ்கோப் ஃபார் ஆண்ட்ராய்டு (Essential Horoscope for Android)
3டி ஸ்கின் எடிட்டர் ஃபார் பிஇ மைன்கிராஃப்ட் (3D Skin Editor for PE Minecraft)
லோகோ மேக்கர் ப்ரோ (Logo Maker Pro)
ஆட்டோ கிளிக் ரிப்பீட்டர் (Auto Click Repeater)
new-serious-warning-to-android-smartphones-google, ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் உலவும் 25 மோசடி செயலிகள்: சைபர் பாதுகாப்பு மெக்கஃபீ எச்சரிக்கை
கவுண்ட் ஈசி கலோரி கால்குலேட்டர் (Count Easy Calorie Calculator)
சவுண்ட் வால்யூம் எக்ஸ்டெண்டர் (Sound Volume Extender)

லெட்டர் லிங்க் (LetterLink)
நியூமராலஜி: பெர்சனல் ஹாரோஸ்கோப் & நம்பர் பிரெடிக்‌ஷன் (NUMEROLOGY: PERSONAL HOROSCOPE &NUMBER PREDICTIONS)
ஸ்டெப் கீப்பர்: ஈசி பெடோமீட்டர் (Step Keeper: Easy Pedometer) டிராக் யுவர் ஸ்லீப் (Track Your Sleep)
சவுண்ட் வால்யூம் பூஸ்டர் (Sound Volume Booster)
அஸ்ட்ராலஜிக்கல் நேவிகேட்டர்: டெய்லி ஹாரோஸ்கோப் & டேரட் (Astrological Navigator: Daily Horoscope & Tarot)
யுனிவெர்சல் கால்குலேட்டர் (Universal Calculator)

SHARE