ஆண் குழந்தையா, பெண் குழந்தையா?- கணவருடன் வித்தியாசமான விளையாட்டு விளையாடிய அமலாபால்

88

 

நடிகை அமலாபால், தமிழ் சினிமாவில் மைனா, தெய்வ திருமகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, ஆடை, ராட்சசன் போன்ற படங்கள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.

இந்த 2024ம் வருடத்தில் மட்டும் அமலாபாலின் 3 படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது, வெப் சீரியஸும் நடித்து வருகிறார் அமலாபால்.

திருமணம்
இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தவர் பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார்.

அதன்பிறகு ஆன்மீகம், வெளியூட் சுற்றுவது என நாட்களை கடந்துவந்த அமலாபால் கடந்த வருடம் நீண்டநாள் நண்பரான தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமண அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து அவர் தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ற விளையாட்டை விளையாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் இரட்டை குழந்தைகள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

SHARE