முல்லைதீவு ஆனந்தபுரம் பகுதியிலேயே இந்த கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமத்திற்குள் முற்றாக இடிந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300மீற்றர் தொடக்கம் 400மீற்றர் வரையில் நிலத்திற்குக் கீழ் கொங்கிறீற்றால் அமைக்கப்பட்டுள்ளது.
மேலுள்ள வீடு செங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்தபோதே இறுதி யுத்தத்தின் போது தேசிய தலைவர் சுற்றிவளைக்கப்பட்டதாக படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்இ இந்த வீட்டை சென்று பார்க்க முடிகின்றது. எனினும்இ உள்ளே சென்று பார்ப்பதற்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.
ஏனெனில் இறுதி யுத்தத்தின்போது குறித்த வீட்டையும்இ பதுக்கு குழியும் விடுதலைப் புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கின்றது. இதனால் உள்ளே என்ன இருக்கின்ற தென்பதை படையினர் கூட இன்னமும் அவதானிக்கவில்லை என கூறப்படுகின்றது.
இதனால் நுழைவாயில் அடைக்கப்பட்டிருக்கின்றது. எனினும்இ இடையில் படையினர் துளையிட்டு பார்த்துள்ளனர். மேலும் இதனுள்ளிருந்து துர்நாற்றம் ஆரம்பத்தில் வீசியதாகவும் படையினர் கூறியுள்ளனர்.