ஆனமடு பெரியகுளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விஷேட சுற்றிவளைப்பு

370

விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காகச் சென்ற புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி மீது நேற்று செவ்வாய்க்கிழமை (19) மாலை கட்டுத்துவக்கு வெடித்ததில் பாடுகாயமடைந்த அவர், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மாலை ஆனமடு பெரியகுளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது, மிருகங்களை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு ஒன்று வெடித்ததில் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகருடன் மேலும் சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகரை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE