ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொடூர தண்டனை

95

 

விபசாரத்திற்கு எதிரான தண்டனையாக பெண்களை பொது வெளியில் அடிப்போம் இவை ஜனநாயகத்திற்கு எதிரானவை, என்றாலும் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம், என தலிபான் அமைப்பின் தலைவர் தெரிவித்ததுள்ளார்.

தலிபான் அமைப்பின் தலைவர் மேற்கத்திய கலாசாரத்திற்கு எதிராக போர் அறிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அந்நாட்டு தொலைகாட்சியில் ஆடியோ வெளியிட்ட தலிபான் தலைவர் மேற்கத்திய மனித உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் தீய சக்தியின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் அவர்களை கற்களால் அடித்து சாகடிப்பதை நீங்கள் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல் எனலாம்.

ஆனால், விரைவில் நாங்கள் விபசாரத்திற்கு எதிரான தண்டனையாக இதனை அமல்படுத்த இருக்கிறோம். ஆனால், விரைவில் நாங்கள் விபசாரத்திற்கு எதிரான தண்டனையாக இதனை அமல்படுத்த இருக்கிறோம்.

நாங்கள் பெண்களை பொது வெளியில் அடிப்போம். இவை உங்களது ஜனநாயகத்திற்கு எதிரானவை, ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்,” என்று தெரிவித்தார்.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசு தொலைகாட்சியில் அடிக்கடி முகம் தெரியாதவரின் குரல் செய்திகளை ஒளிபரப்புகிறது

அந்த வகையில், வெளியான ஆடியோவில் தான் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர தண்டனை குறித்த அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.

SHARE