ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்

76

 

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது இன்று மாலை (21.02.2024) ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே 4.2 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 3 ஆவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE