ஆப்கானிஸ்தானில் 20 பேர் பலி

320

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. தொடர் கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

அர்கன்டாப், டாமான், ஸ்பின் போல்டாக், டாண்ட் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை சிறுவர்கள் உள்பட 20 பேர் பலியாகிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 10 பேர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இந்த தகவலை ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

SHARE