டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.இந்த உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளிடம் தோற்றது.
இந்நிலையில் நேற்று நாக்பூரில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது. ஆப்கான் அணியின் வெற்றியை அந்த அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அவர்களின் வெற்றி கொண்டாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லும் இணைந்து கொண்டு அந்த அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். |