ஆப்கானுக்கு பதிலடியாக அதிவேக அரைசதம்..அதிவேக 2000 ரன் விளாசிய இலங்கை வீரர்கள்!

108

 

இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 24 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்.

அவிஷ்கா பெர்னாண்டோ ருத்ர தாண்டவம்
பல்லேகலவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 266 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 65 (77) ஓட்டங்களும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 54 (59) ஓட்டங்களும் விளாசினர்.

இலங்கை தரப்பில் மதுஷன் 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அணி தனது இன்னிங்சை தொடங்கியது. அவிஷ்கா பெர்னாண்டோ ருத்ர தாண்டவம் ஆடினார்.

அதிரடியில் மிரட்டிய அவர், 24 பந்துகளில் அரைசதம் விளாசினார். 35வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவிஷ்காவுக்கு இது 7வது அரைசதம் ஆகும்.

பதும் நிசங்கா
மறுமுனையில் பதும் நிசங்காவும் அரைசதம் அடித்தார். இதன்மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை அதிவேகமாக கடந்த இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் 52 இன்னிங்சில் இந்த சாதனையைப் படைத்து ரிக்கி பாண்டிங்கை முந்தினார்.

இலங்கை அணி தற்போது வரை 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 144 ஓட்டங்கள் குவித்துள்ளது. அவிஷ்கா பெர்னாண்டோ 54 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்களும், பதும் நிசங்கா 66 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

SHARE