அப்பிள் நிறுவனமானது Mac Book Air எனும் மடிக்கணணியை அறிமுகம் செய்திருந்தமை அறிந்ததே.
இக் கணணியானது பாரம் குறைந்ததாகவும், மிக மெலிதான வடிவமைப்பினைக் கொண்டிருந்தமையாலும் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்திருந்தது.
எனினும் அதிக விலை காரணமாக இக் கணணியை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிகம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு HP நிறுவனம் Mac Book Air கணணியை ஒத்த புதிய கணணி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
HP ENVY எனும் இக் கணணியானது 13.3 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டுள்ளதுடன், Intel Core i5 and i7 Processors, 16GB RAM பிரதான நினைவகம், 1TB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதில் இணைக்கப்பட்டுள்ள மின்கலமானது 90 நிமிடங்களில் 90 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடியதாக காணப்படுவதுடன், 14 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
எதிர்வரும் 26ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இம் மடிக்கணணியின் பெறுமதி 849.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.