இலங்கை (சிங்கள) ஆட்சிக் கெதிராக இந்த இனப் படுகொலை குற்றச்சாட்டு என்பது ஒன்றும் புதியதே அல்ல. ஆனால் சர்வதேச குற்றவியல் சட்டப்படி, மனித குலத்துக் கெதிரான குற்றங்களினை இலங்கையின் முந்திய அரசுகள் செய்துள்ளதாக , அதுவும் போர் குற்றவாளியாக தமது தரப்பினர் குற்றம் சாட்டும் மஹிந்தவுக்கு எதிராக , அவரை பதவி நீக்கியபின் , அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஐ நா மனித உரிமை ஆணையம் ஏற்கனவே உள்வாங்கி உள்ள நிலையில்; இலங்கையிலே இனப்படுகொலை காலம் காலமாக நடந்து வந்துள்ளது, அது மஹிந்த அணியின் இறுதி யுத்தத்தில் யுத்தக் குற்றமாக முடிவுக்கு வந்துள்ளது என்பதை தீர்மானம் வலியுறுத்தும் இனப்படுகொலை குற்றவாளிகள் விசாரிக்கப்படல் வேண்டும்; தண்டிக்கப்படல் வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை வடக்கு மாகாண சபை கொண்டு வந்துள்ளது. | |
ரோம சட்ட விதிகள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு வழங்கும் நியாயாதிக்கத்தின்படி (உறுப்புரை 5 ) சர்வதேச நீதிமன்ற வழக்குத்தொடுனர் இனப்படுகொலைக் குற்றங்கள் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக் கெதிரான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுக்க முடியும். | |
அதற்கான பரிந்துரையை ஐ. நா மனித உரிமை ஆணையகம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு வழங்கி இலங்கையின் போர்க் குற்றவாளிகளை இனப் படுகொலையாளிகளை நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற வடக்கு மாகாண சபைத் தீர்மானத்தில் புலிகள் இலங்கையில் செய்த மனித உரிமை மீறல்களை பற்றி எந்த விதத்திலும் “இனப் படுகொலை தீர்மானத்தில்” பேசப்படவில்லை. “இனப் படுகொலை தீர்மானத்தில்” தர்க்க ரீதியில் அப்படி ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக பேசுவது சாத்தியமில்லை என்று வைத்துக் கொண்டாலும் முதலமைச்சர் சகட்டு மேனிக்கு இலங்கையின் (சிங்கள) அரசுகள் செய்ததாக குற்றம் சாட்டிய ;இனப்படுகொலை குற்றச்சாட்டை முன் மொழியும் தீர்மானத்தை முன் வைத்து ஆற்றிய உரை முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு நியாயமான மனிதராக இருந்திருப்பாரா என்ற தார்மீக ஐயத்தை ஏற்படுத்துகிறது. அதேவேளை அங்கு அவருக்கு செவி மடுத்து அவரின் தீர்மானத்தை ஆதரித்த ஏனைய சமூக உறுப்பினர்களின் தராதரம் மற்றும் தார்மீகம் பற்றியும் பல கேள்விகள் எழுகின்றன. | |
>தமிழர்கள் (புலிகள்) சகோதரத் தமிழர்கள் மீதும் ; தமிழ் பேசும் மக்களான முஸ்லிம் மக்கள் மீதும் அப்பாவி சிங்கள மக்கள் மீதும் மேற்கொண்ட மனித உரிமை (மனித குலத்துக்கு எதிரான ) குற்றங்களை கண்ணை மூடிக் கொண்டு முன்னர் ஆதரித்த தமிழ் தேசியக் .கூட்டமைப்பினர் இப்பிரேரணையை முன் வைத்த பொழுது வடக்கு மாகாண சபையில் உள்ள முஸ்லிம் சிங்கள உறுப்பினர்களுக்கு அவர்களின் சமூகங்களுக்கு தமிழர் தரப்பில் புலிகளால் இழைக்கப்பட்ட அநீதி குறித்து தங்களின் அக்கறையை கவலையை வெளிப்படுத்தி அவற்றையும் தீர்மானத்தின் ஒரு அம்சமாக ஏதோ ஒரு விதத்தில் உள்ளடக்கும் விதத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தீர்மானத்தில் சொல்லப்படும் பாரிய குற்றச்சாட்டு (இனப் படுகொலை) தொடர்பில் சர்ச்சைகள் இருப்பினும் ; தீர்மானம் குறித்த கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு நியாயமான ஒரு பல்லின பல மத அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ஆட்சி அதிகாரம் கொண்ட சபையில் செய்யப்பட வேண்டிய ஒரு சிறந்த நடைமுறையாக இருந்திருக்கும் . | |
ஆனால் சுவாரசியமாக புலிகளால் வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பமொன்றின் வாரிசான (அஸ்மின்) ஐயூப் அளுத்கம முஸ்லிம் மக்களுக்கு வடக்கில் குரல் கொடுத்தவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் எங்களுக்கு இப்படி எல்லாம் நடந்திருக்குமா என்று முஸ்லிம் பெண்ணொருவர் தன்னிடம் அங்கலாய்ந்ததாக ஆரவாரம் பண்ணியவர் வாயே திறக்காமல் சேராத இடம் சேர்ந்து சிறப்புப் பெற்றதால் செஞ் சோற்றுக் கடனுக்காக வாக்களித்திருக்கிறார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ரிஷாத்தின் தம்பி சபையில் வாய் மூடி மவுனியாக இருந்திருக்கிறார். அவர் வாக்களித்தாரா என்று இன்னமும் அறிய முடியவில்லை . அப்படி அவர் வாக்கு அளித்திருந்தால் நிச்சயமாக அவரோடு வட மாகாணத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சார்பில் கண்டனத்துக்கு உரிய விசயமே. ! | |
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கட்சியின் கட்டளைப்படி அன்றைய அமர்விற்கு ஆஜராகாமல் நமக்கேன் வம்பு என்று ஓடி ஒளிந்திருக்கிறார். முஸ்லிம் காங்கிரஸ் அப்படி செய்யாது விட்டிருந்தால்தான் நாம் மூக்கில் விரலை வைத்திருக்க வேண்டும் . ஆகவே இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை இதற்கு சாணக்கிய விளக்கமளிக்க கட்சியில் பல சகலகலா வல்லவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சிங்கள உறுப்பினர்கள் இருவரும் என்ன செய்தார்கள் என்று அறிய முடியவில்லை . ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவெனில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு சிறிசேனாவிடம் கை குலுக்கினார் விக்னேஸ்வரன் என்று கச்சை கட்டிக் கொண்டு எதிர்கட்சித் தலைவர் தவராசா விக்னேஸ்வரன்-சிறிசேனாவின் சந்திப்பை விமர்சித்திருக்கிறார். விக்னேஸ்வரனும் தனது ;மாலை பொழுதில் மங்காமல் இருக்க மட்டரகமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதற்கு இந்த தீர்மானமும் அதன் பின்னரான அவரின் ஜனாதிபதி உடனான சந்திப்பும் சான்று. ஆனாலும். சொந்த கட்சியின் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை கொண்டுவரும் தனிமங்களை ஆதரித்து வாக்களித்துவிட்டு விக்னேஸ்வரனின் பிழையை தூக்கிப் பிடிக்கிறார் தவராசா . | |
இன்னுமொரு புறத்தில் நோக்கும் போது வடக்கு மாகான எதிர்க்கட்சி என்பது ஈ.பீ தீ பி அல்ல; (E.P.D.P) மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) கட்சிகளின் சார்பில் அக்கட்சியின் கூட்டில் உள்ள ஈ.பீ தீபீயும் அங்கத்துவம் வகித்தது/வகிக்கிறது. அந்த வகையில் தவராசா அல்லது அக்கட்சியில் அத்தீர்மானத்துக்கு வாக்களித்தவர்கள் தாங்கள் அங்கத்துவம் வகித்த வடக்கு மாகாண ஆட்சியில் எதிர்கட்சியியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் வாக்களித்ததும் சர்ச்சைக்குரியதாகும். | |
>வட மாகாண சபையின் கைதடி பேரவைச் செயலகத்தில் 10.02.2015 அன்று இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை முன்வைத்து முதலமைச்சர் ஆற்றிய உரையில் உள்ள சில கருத்துக்கள் பிற்போக்குத் தனமான பீடிகைகளைக் கொண்டவை காரசாரமான விமர்சனத்துக்கு உரியவை, பாதிக்கப்பட சமூகத்தின் குற்றவாளிகளை கோடிட்டுக் காட்டாத பொது நீதிக்கு எதிரானவை என்பதால் அவ்வுரையின் சில பகுதிகள் அல்லது வாக்கியங்கள் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நம்புகிறேன். | |
“தமிழ்ப் பேசும் மக்கள் நீதியைத் தேடும் போராட்டத்தில் இன்றைய நாள் முக்கியமான ஒரு நாள். அரசாங்கக் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் இதுவரை காலமும் எம்மிடையே பல்வித முரண்பாடுகளையும் மூர்க்கமான முடிவுகளையும் நாம் எம்முள் வெளிக்காட்டி வந்தாலும் நாம் யாவரும் பாதிக்கப்பட்ட மக்களே என்ற விதத்தில் ஒன்று சேர்ந்து எமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் ஒரு உயர்ந்த நன்நாள்” | |
>இது யாரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் எடுக்கப்படும் முயற்சியல்ல. மாறாக யாவருக்கும் நீதியானது பொது யாவருக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதற்கான முன்னெடுப்பே இது. எந்தக் காலகட்டத்திலும் நீதி மறுக்கப்படக்கூடாது சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் சேர்ந்து சகோதரத்துவத்துடன் எமக்கு வாக்களிக்க வேண்டும்” | |
திடீரென்று நடைமுறையில் ஈபீடீபீயின் கொள்கையான “மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற கோஷத்தை ஒத்த வகையில் மத்தியிலே (தங்கள் விரும்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி ஆக்கமும் இணக்கப்பாடும் ) மாநிலத்தில் சுயாட்சி என்ற வகையில் இன்று அரசியல் அதிகாரத்தை (முழுமையாக இல்லாவிடினும்) எதோ ஒரு விதத்தில் வட மாகாண ஆட்சியின் ஊடாக பெற்றுக் கொண்டுள்ள வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திம்புக் கோட்பாடான தமிழர் தாயகத்தை கைப்பற்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கைப்பற்ற வேண்டி இருந்தது. அந்த சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் கோதாவில் கிழக்கு மாகான சபையை மூலம் பெற முஸ்லிம் காங்கிரசுடன் முதலமைச்சர் சமரசம் செய்து கொண்டு முன்னரே முயற்சித்ததும் முடியாது போனது. இம்முறை அந்தப் பதவி தமக்கே உரியது என்றும் மத்தியில் ஆட்சி அமைக்க துனை போனதுக்கு வெகுமதியாய் கிழக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து தோற்ற பின்னர் வட மாகாண சபையின் தீர்மானமாக இனப்படுகொலைத் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. | |
இம்முறை ஏற்கனவே தாங்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வந்து கிழக்கிலேயும் ஆட்சியைக் கைப்பற்றி , வடக்கு கிழக்கு மாகான சபைத் தீர்மானமாக இன அழிப்பு தீர்மானத்தைக் கொண்டுவர திட்டமிட்டிருந்தனர். | |
நிச்சயமாக முஸ்லிம் காங்கிரசை அந்தத் தீர்மானத்துக்கு வளைத்துப் போட்டுவிடலாம் என்று நம்பியிருந்தனர். அத்துடன் இன்னும் ஓரிருவரை எதிரணியில் இருந்து பெற்று விடலாம் என்று நம்பியிருந்தனர். ஒருவேளை முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையாக அப்படியான தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க மறுத்தாலும் அவர்கள் சபையில் பிரசன்னமாகாது பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற வீண் போகாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள் . சம்பந்தனின் “சிஷ்யன்” ஹக்கீம் அது பற்றி அறிந்து கொள்ளாவிட்டாலும் கூட்டமைப்பின் நிகழச்சி நிரலுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆப்பு வைத்து விட்டார். முழு தமிழர் (தமிழ்) தாயகத் தீர்மானமாக சர்வதேச அளவில் கொண்டுவர நினைத்திருந்த அல்லது அதற்காக முயற்சிக்கப்பட்ட தீர்மானம் இறுதி நேரத்தில் வட மாகான சபைத் தீர்மானமாக மாத்திரம் இனப்படுகொல தீர்மானம் கொண்டு வரப்பட்டது. | |
இந்த தீர்மானம் எல்லோரும் நினைப்பதுபோல் இலங்கையில் வரையப்பட்டதும் இல்லை என்பதும் இது இலண்டனில் வரையப்பட்டிருக்க வேண்டும் ஏனெனில் இந்த தீர்மானத்தினை முன்னரே ஏதோ ஒரு விதத்தில் பார்த்த ஞாபகங்கள் இக் கட்டுரையாளருக்கும் உண்டு. மொத்தத்தில் இது ஒரு புலம்பெயர் புலிகளின் , அவர்களின் ஆதரவாளர்களின் தீர்மானம் என்பதுவே உண்மையாகும். | |
இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு புலம் பெயர் புலிகளின் சுலோகமாக பல நாடுகளில் பல வருடங்களாக உச்சரிக்கப்பட்டது;: பலவித உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டன: ஆனால் இம்முறைதான் அச்சொல் ஒரு மந்திரமாய் செய்யப்பட்டு உயிர்ப்புடன் இலங்கையில் சபை ஏறி இருக்கிறது. இனி உச்சாடனங்கள் உலகமெங்கும் கேட்கும்! | |
இந்த தீர்மானம் வந்த கையேடு தீவிரவாத தமிழ் தனிமங்களும் உசாரடைந்துள்ளன . கிழக்கு மாகான சபைத் தேர்தலின் பொழுது திடீரென்று முளைத்த அல்லது வீரியம் பெற்ற தமிழ் சிவில் சமுக அமையமானது . இலங்கையின் வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற 100க்கு மேற்பட்ட சிவில் சமுக செயற்பாட்டாளர்களைக் கொண்ட ஒரு வலையமைப்பு. அதன் அழைப்பாளர் ஆயர் இராயப்பு ஜோசப் | |
தலைமையில் கிழக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டி இடக் கூடாது தமிழர் தாயகத்தை பிரிக்கும் வகையில் அது அமைந்து விடும் என்று முரண் பிடித்ததும் அவருக்கு சால்ஜாப்பு சொல்லிவிட்டு சம்பந்தனார் போட்டியிட்டதும் தெரிந்த கதை . பின்னர் இந்த சிவில் தீவிரவாத தனிமங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு மாகாணத் தேர்தலில் கண்டிப்புக் காட்டாமல் கட்டுப்பாடு போட்டார்கள். இப்பொழுது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் இனப்படுகொலைத் தீர்மானம் கொண்டு வந்த கையோடு தங்களின் பங்குக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளருக்கு பின்வரும் செய்தியை சுடச் சுட அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. | |
;இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உட்பட இன்றைய அரசின்; முக்கிய பங்காளிகள் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளாக இருந்தார்கள் என்பதோடு இலங்கை அரசாங்கம் தூய்மையான ஒரு யுத்ததையே நடாத்தியது என வலியுறுத்தி வருபவர்கள். அத்தோடு தற்போதைய மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தின் பங்காளிகளான சில மிக முக்கிய பிரமுகர்கள் இறுதிப் போரில் நேரடியாக முக்கியமான பங்கு வகித்தவர்கள். | |
முன்னைய அரசாங்கத்தில் எதிர்கட்சியில் இருந்து தற்போது அரசாஙகத்தில் அங்கம் வகிப்போர் பொறுப்பக் கூறல் விடயத்தை வெறுமனே ஒரு வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சனையாகப் பார்ப்பவர்கள். எனவே இவ்வரசாங்கத்திடமிருந்து பொறுப்புக் கூறலை எதிர்பார்க்க முடியாது. | |
எனவே தங்கள் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையை வெளியிடுமாறும் அதன் வழி சர்வதேசசெயன்முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு தங்கள் அலுவலகத்தை மரியாதையுடன் வேண்டிக்கொள்கிறோம். | |
இவ்விசாரணை அறிக்கை மூலம் பாரதூரமான குற்றங்கள் இடம்பெற்றமை கண்டறியப்படுமிடத்து தக்க சர்வதேச குற்றவவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒழுங்குகளை ஆரம்பிக்குமாறு உரிய ஐநா அமைப்புகளையும் மற்றும் உறுப்புநாடுகளையும் தங்கள் அலுவலகம் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம். | |
>குமாரவடிவேல் குருபரன் என்பவர் கையொப்பமிட்டு ஆயரின் தொடர்பு விபரத்துடன் ஐக்கிய நாடுகள் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதமும் இலங்கையில் தமிழ் தேசிய சிவில் தீவிரவாதிகள் சமாதானத்துக்கு எதிராக இன மீள் நல்லிணக்கத்துக்கு எதிராக மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. | |
முஸ்லிம் மக்களின் மீதான இனப் படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் | |
முதல்வர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரைக்கு;விளக்க உரை அளிக்க முன்னர் வடக்கு கிழக்கில் வாழந்த முஸ்லிம்களுக்கு புலிகளால் (தமிழர்களால் ; இங்கு ;புலிகளே தமிழர்கள் ; தமிழர்களே புலிகள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சூளுரைத்ததையும் ஞாபகத்தில் இருந்து மீட்டுக் கொண்டு ) இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி மீட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. அதிலும் குறிப்பாக 1990 இல் இருந்து ஒரு நெடிய இனப்படுகொலை வரலாற்றையும் இனச் சுத்திகரிப்பு வரலாற்றையும் இங்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது. ஏனெனில் சர்வதேச குற்றங்களில் இனச் சுத்திகரிப்பும் உண்டு : உறுப்புரை 7 (d) மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் பலவந்த குடிமக்கள் வெளியேற்றம் ; பற்றிக் கூறுகிறது. போஸ்னியாவில் முஸ்லிம் மக்கள் பலவந்தமாக ;சேர்ப் (Serb) இனப்படுகொலையாளிகளால் துன்புறுத்தப்பட்டதையும் வெளியேற்றப்பட்ட நிகழ்வையும் ஒட்டியதாக எழுந்த சொற்பதமான ethnic cleansing இனச் சுத்திகரிப்பை புலிகள் அதே காலகட்டத்தில் வடக்கிலே செய்தனர். | |
முன்னாளில் புளட் இயக்க உறுப்பினரும் பின்னாளில் புலிகளின் பிரச்சாரகருமாக அறியப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனால் மாமனிதர் என்று கவுரவிக்கப்பட்ட தராக்கி எனும் சிவராம் எல் ரீ ரீ யின் முஸ்லிம் இனவழிப்பு The LTTE’s genocide of the Muslims)என்ற தலைப்பிட்ட தனது ஆங்கில எழுத்தாக்கம் ஒன்றில் புலிகளின் முஸ்லிம்கள் மீதான இனவழிப்பு நடவடிக்கை குறித்து எழுதி இருந்தார். புலிகள் முஸ்லிம்கள் மீது கிழக்கின் நடத்திய இனப் படுகொலை வடக்கில் நடத்திய இனச் சுத்திகரிப்பு எப்படி நன்கு திட்டமிட்ட வகையில் புலிகளால் செய்யப்பட்டது என்பதனை அதன் பின்னனிகளைப் பற்றி அவர் விரிவாக எழுதி இருந்தார். அந்த வகையில் முஸ்லிம்கள் “இனச் சுத்திகரிப்பு” செய்யப்பட்டதை இதுகாலவரை சிவராமும் சுமந்திரனும் ( புலிகளின் அழிவின் பின்னராயினும்) மட்டுமே தமிழர்களுக்குள் வெளிப்படையாகச் சொன்னவர்கள். | |
2013ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி கனடாவில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனிடம் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் வட மாகாணத்திலே இருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியது குறித்து நியாயம் கற்பித்து அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் என்ன கருதுகிறார் என்று கேள்வி தொடுத்த பொழுது சுமந்திரன் இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு பற்றிக் குறிப்பிட்ட விடயங்களை இங்கு மீள நினைவு படுத்துதல் அவசியமாகிறது. | |
முழு மாகாணத்திலேயும் இருந்து ஒரு இனம் வெளியேற்றப்படுவது என்பது சர்வதேசச் சட்டத்தில் பாரிய ஒரு குற்றம் எங்களுடைய மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்ததென்று நாங்கள் சொல்லுகிறோம் அது இன்னும் சர்வதேச சமூகத்தாலே ஏற்றுக் கொள்ளப்படவில்லை நிபுணர் குழு அறிக்கையிலே பேர்சிகியுசன் (Persecution) என்ற சொல்லும் எக்ஸ்டேர்மினேஷன் (Extermination) என்ற சொல்லும் பாவிக்கப்பட்டிருக்கிறதே தவிர ஜெனசைட் (Genocide) என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் எதினிக் கிலேன்சிங் (Ethnic Cleansing) என்பது இனச் சுத்தகரிப்பு வட மாகாணத்திலே நடந்தது என்பது பற்றி எந்தவிதமான சந்தேகமும் கிடையாது அது சர்வதேச சட்டத்தில் இனப் படுகொலைக்கு அடுத்ததான ஒரு தட்டு” சுமந்திரன் ஒரு மனித உரிமை சட்டத்தரணி என்ற வகையில் முஸ்லிம் மக்களின் வட மாகாண பலவந்த வெளியேற்றம் ஒரு இனச் சுத்திகரிப்பு என்பதை இனப்படுகொலை குறித்த சர்ச்சை இருப்பதை அங்கீகரித்துக் கொண்டு மனட்சாட்சியுடன் ஒரு மக்கள் அவையில் பகிரங்கமாக பறைசாற்றினார். | |
சென்ற வருடம் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்கள் தங்களுக்கு புலிகளால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக “ஜெனிவாவில் பிரேரணை” கொண்டு வரப்படவேண்டும் என்றும் இது தொடர்பாக கிழக்கில் இருந்து முஸ்லிம் பிரதிநித்துவம் கொண்ட குழு ஒன்று ஜெனிவாவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கையை கிழக்கு மாகாண சபை ஷிப்லி பாரூக் என்பவர் பிரேரித்தார். இந்த பிரேரணை அடிப்படையில் மாகாண சபை அதிகாரதுக்குட்பட்டதல்ல. என்றாலும் அந்த பிரேரணையை முன் வைத்து அவர் புலிகளைக் கண்டித்துப் பேசியதுக்கு சில தமிழர் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மொத்தத்தில் அது தமிழர்களைக் கண்டித்துப் பேசும் – தங்களுக்கு எதிராகப் பேசும்- ஒரு சமாச்சாரமாக எடுத்துக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு கிளம்பினர். | |
இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையில் கிழக்கில் முஸ்லிம்களின் உதிரத்தையும் உடலங்களையும் வைத்து கட்டி எழுப்பப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைத்த புலிகளின் இனப்படுகொலை இனச் சுத்திகரிப்பு குறித்து ஒரு தீர்மானத்தை கிழக்கு மாகான சபையில் , அதுவும் தங்களின் ஆட்சியின் கீழ் ( அஸ்ரப் கனவு கண்டதாக சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் மாகாண சபை இல்லாவிட்டாலும் முஸ்லிம் முதலமைச்சரைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில்) கொண்டு வர முடியுமா ? சுமந்திரன் சொல்வதுபோல் புதிதாக ஐ. நா. ஆணையம் இலங்கை மீதான அறிக்கையை ஒத்தி வைத்துள்ள நிலையில் இன்னமும் சான்றுகளையும் சாட்சிகளையும் வழங்க வாய்ப்புண்டு என்று கூறும் பின்னணியில் . அதுவும் புலிகளின் மாமனிதன் சிவராம் புலிகள் மீது சுமத்திய முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டையும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மனித உரிமை சட்டத்தரணி சுமந்திரன் பறைசாற்றிய இனச் சுத்திகரிப்பு குற்றச்சாட்டையும் கருத்திற்கொண்டு முஸ்லிம் காங்கிரசும் கிழக்கு மாகான சபையில் உள்ள முஸ்லிம் மற்றும் மனச்சாட்சியுள்ள உறுப்பினர்களை கொண்டு ஒரு தீர்மானத்தை இந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சந்தர்ப்பத்தில் நிறை வேற வேண்டும். என்ன சொல்லி விக்னேஸ்வரன் இனப் படுகொலைத் தீர்மானத்தை கொண்டு வந்தாரோ , அதே தமிழ் பேசும் மக்களின் ” நீதிக்கான போராட்டமாக , நீதி மறுக்கப்படக் கூடாது என்பதற்காக, அவரின் உரையின் மேற் சொன்ன வாசகங்களை முன் வைத்து . | |
;இது யாரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் எடுக்கப்படும் முயற்சியல்ல. மாறாக யாவருக்கும் நீதியானது பொது யாவருக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதற்கான முன்னெடுப்பே இது. எந்தக் காலகட்டத்திலும் நீதி மறுக்கப்படக்கூடாது சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் சேர்ந்து சகோதரத்துவத்துடன் எமக்கு வாக்களிக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ! | |
கிழக்கு மகான சபை தமிழர் தரப்புக்கு அவர்களின் மனச்சாட்சிக்கு உண்மையான தமிழ் முஸ்லிம் உறவுக்கு ஒரு பரிசோதனையாக கிழக்கு மாகாண சபை தீர்மானம் அமையும். குறிப்பாக வட மாகாண சபைத் தீர்மானத்தின் பின் தி ஹிந்து பத்திரிக்கையில் வெளியான ஆசிரிய தலையங்கத்தை குறித்து பின்வருமாறு பின்னூட்டம் எழுதிய சிவ சன்முகமூர்த்தி சுந்தரம் குறிப்பிட்ட “மாற்றுக்கருத்துக் கொண்ட பல ஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக வெட்டிக்குதறியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர். வடபகுதியிலிருந்து இலட்சக்கணக்கான முஸ்லீம்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். கிழக்கில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பள்ளிவாசல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய அமைதிப்படை புலிகளுடனான மோதலில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மடிந்துள்ளனர். இவையனைத்தினையும் உங்கள் மனச்சாட்சிக்கு சமர்ப்பிக்கிறேன். என்று கூறியதுவே ;நீதி பொதுவானது என்றும் தமிழ் பேசும் மக்களின் நீதிக்கான போராட்டம் என்றும் தீர்மானத்தில் உரையாற்றிய விக்னேஸ்வரன் (நீதி வழுவிய நீதியரசருக்கும்) அவரின் வகையறாக்களுக்கும் இலங்கையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் தேசியவாதிகளுக்கும் நாம் சொல்லும் செய்தியாகும். | |
புலிகளின் இனப்படுகொலை அல்லது மனித குலத்துக் கெதிரான குற்றங்கள் மற்றும் இனச் சுத்திகரிப்புக்கு எதிராக தீர்மானங்கள் மேற்கொள்ளும் திராணி முஸ்லிம் காங்கிரசின் முதல்வரைக் கொண்ட கிழக்கு மாகாண சபைக்கு இருக்கிறதா? |