ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

242

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக ஏற்பட்டு வரும் கால்நடைகளின் உயிரிழப்பு காரணமாக, கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகளவில் கால்நடைகளை கொண்ட பிரதேசமாக குமுழமுனை பிரதேசம் காணப்படுகின்றது.

அத்துடன், கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, தண்ணிமுறிப்பு, ஒதியமலை வரையான எல்லைப்பகுதிகளில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றன.

இந்தநிலையில், தொடர்ந்து இடம்பெற்று வரும் கால்நடைகளின் உயிரிழப்பு தமது வாழ்வாதாரத்தை பாரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளதாகவும், கால்நடைகளை வளர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE