தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் இனியா கூறியதாவது:மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்ததில்லை. தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தரும் அளவுக்கு மல்லுவுட்டில் ஏற்கவில்லை. திறமையான பல நடிகைகள் இருந்தாலும், நடிப்பில் ஆர்வம் இல்லாத நடிகைகளை ஒப்பந்தம் செய்து சில மலையாள இயக்குனர்கள் நடிக்க வைக்கின்றனர்.
நான் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை குறை சொல்கிறார்கள். அப்படி ஆடுவதில் என்ன தவறு? நடிப்பில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ, அதே அளவுக்கு நடனத்திலும் ஆர்வம் இருக்கிறது. இங்கு நான் மட்டுமல்ல, நிறைய ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். இன்னமும் பலர் ஆட தயாராகி வருகிறார்கள். ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவதை கவர்ச்சி ஆட்ட வகையில் சேர்க்கக்கூடாது. சில நடிகைகளைப் போல் நான் ஆபாசமாக நடனமாடவில்லை. ஹீரோயினாக மட்டுமின்றி, வில்லி கேரக்டர்களிலும் நடிக்கிறேன். ஒரே பாணியில் நடிக்காமல், மாறுபட்ட நடிப்பை வெளியிட இதுபோன்ற வாய்ப்பு எப்போதாவதுதான் ஒருமுறை கிடைக்கிறது. அதை தவறவிடக் கூடாது. இதுகுறித்து யார் என்ன சொன்னாலும், அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன்