இன்றைய நவீன உலகில் சாப்பிடுவதை மறந்துவிட்டு கூட, இணையதளங்களுக்கு அடிமையானவர்கள் ஏராளம்.அப்படி, இணையதளம் மூலம் சிலவகை பொருட்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவதற்காக புதுவித அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உதாராணத்திற்கு, நீங்கள் மதுவகைகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவிரும்பினால், Bareye Application – ஐ பயன்படுத்தி அவர்களுக்கு அனுப்பலாம். என்னென்ன பொருட்கள் அனுப்பலாம்? தங்கம்: bitcold.com என்ற கணக்கை ஆரம்பித்து அதில் தங்கங்களை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் தங்க விகிதத்தின் அளவு சிலநேரத்தில் பாதிக்கப்பட்டு வருவதால், நீங்கள் சேமித்து வைத்துள்ள தங்கத்தை அதில் உள்ள கிளிக் பட்டனை பயன்படுத்தி அனுப்பிக்கொள்ளலாம். கட்டியணைத்தல்: உங்கள் உறவினர்கள் தொலைதுரத்தில் இருப்பார்கள், அவர்களை கட்டியணைத்து உங்கள் அன்பினை பரிமாற நினைத்தீர்கள் என்றால், Hug apps – ஐ திறந்து, அதில் Select to contact – ஐ கிளிக் செய்து Send கொடுங்கள். பின்னர், உங்கள் ஸ்மார்ட்கைப்பேசியை உங்கள் மார்போடு அணைத்துகொள்ளுங்கள், நீங்கள் அனுப்பிய தகவல் அவர்களுக்கு சேரும்போது, அவர்களின் கைப்பேசி நீண்டநேரம் Vibrate ஆகும். ஆந்தை கழிவு: உயிரியல் படிக்கும் மாவணர்களுக்கு பயன்படும் இந்த ஆந்தை கழிவினையும் அனுப்பலாம். கிளிட்டர் பாம் (Glitter Bomb): 99.99 டொலர் செலவில் இந்த கிளிட்டர் பாமினை அனுப்பினால், கடிதம் போன்ற வடிவில் இருக்கும் இதனை திறந்தவுடன் உள்ளே இருந்த Glitter(மினுப்பான்கள்) சிதறும். மதுவகைகள்: ஸ்மார்ட்கைப்பேசியின் மூலம் BarEye app – ஐ பயன்படுத்தி மதுவகைகளை அனுப்பலாம். ஆவி: நியூசிலாந்தை சேர்ந்த ஏவி வுட்பெரீ (Avie Woodbury) என்ற பெண் இரண்டு ஆவிகளை ஒரு சிறு பாட்டிலில் பிடித்து, புனித நீர் கொண்டு அதை அடைத்து, ஆன்லைனில் 1300 டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார். வண்டுகள்:செவ்வண்டுகளை வாங்கி, விவசாயிகள் மற்றும் வண்டுகளை வளர்ப்பவர்ளுக்கு இதனை நீங்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்யலாம், இதன் விலை 14,00 டொலர் ஆகும். |