ஆஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய பெண்!

93

 

ஆஸ்திரேலியா உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது, இதனால் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குயின்ஸ்லாந்தின் மவுண்ட் இஷா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், தூதரக ரீதியான உதவிகளை செய்ய அவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

SHARE