இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 259 ரன்கள் குவிப்பு

524

இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர்களாக முரளி விஜய்யும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டத்தின் 7வது ஓவரில் 24 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த தவான் விக்கெட் கீப்பர் பிரியரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார். பின்னர் 3வது விக்கெட்டு புஜாரா களமிறங்கினார். நிதானமாக விளையாடிய புஜாரா அவ்வப்போது பவுண்டரிகளையும், ஒன்றிரண்டு ரன்களையும் எடுத்து வந்தார். இந்நிலையில் 69 பந்துகளை சந்தித்து 38 ரன்களை எடுத்த புஜாரா ஆண்டர்சன்னின் பந்து வீச்சில் அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய கோலி 1 ரன்னில் நடையை கட்ட, ரகானே தன் பங்குக்கு 81 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் தோனி அதிரடியாக ஆடி 64 பந்துகளில் 50 ரன்களை குவித்தார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய விஜய் 294 பந்துகளை சந்தித்து 122 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டியில் தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார்.

SHARE