இங்கிலாந்து அணிக்கு உதவி செய்ய தயாரான ஜெயவர்த்தனே

447

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்த்தனே செயற்படவுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ஜெயவர்த்தனே செயல்படவிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதே போல் காலிங்வூட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆலோசகராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண தொடரிலும் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SHARE