இங்கிலாந்து சிறுவனின் கையில் கிடைத்த அபூர்வ வளையல்!

105

 

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வளையல் இங்கிலாந்து சிறுவன் ஒருவர் கையில் கிடைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது.

கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல்
மங்கிய நிலையில் காணப்பட்ட அந்த பழைய காலத்து வளையலை கொண்டு போய் தனது தாயிடம் கொடுத்தான். அதை வாங்கிய அவனது தாய் இது பழைய வளையல் என்று குப்பையில் வீச நினைத்தார்.

ஆனாலும் திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இதனால் அந்த வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல் என தெரியவந்தது.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த வரலாற்று பொருள் சிறுவன் கையில் கிடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில்,

ரோவன் எப்போதும் பூமியில் இருந்து பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். அவன் அவ்வாறு செய்யும் போது நான் அவனை திட்டினாலும் தற்போது அவனது கையில் வரலாற்று பழமைவாய்ந்த தங்க வளையல் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

SHARE