இங்கிலாந்தை தோற்கடித்து கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா

377
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியது.இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் இயான் மார்கன் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாசன் ராய்(4), அலெக்ஸ் ஹேல்ஸ்(4) மோசமான தொடக்கம் தந்தனர், ஜேம்ஸ் டெய்லரும்(12) ஏமாற்றினார்.

தொடர்ந்து வீரர்களும் சொதப்பவே 33 ஓவரில் 138 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் சுலப இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணி 24.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியது.

ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை அவுஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ் வென்றார்.

SHARE