தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத்.
தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் கூட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தற்போது தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் கங்குவா, விஷால் நடித்துவரும் ரத்னம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தனது வாழ்க்கையில் நடக்கும் சில சந்தோஷமான விஷயங்களை எப்போதும் இன்ஸ்டாவில் பதிவிடும் தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு சூப்பரான பதிவு ஒன்று போட்டுள்ளார்.
ஸ்பெஷல் பதிவு
அது என்னவென்றால், சென்னையில் இருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவுக்கு இசைஞானி இளையராஜா சென்றுள்ளார்.
இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார், அந்த புகைப்படங்களை பதிவிட்டு என் வாழ்நாள் கனவு நனவானது என ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார்.
எனது மிகப் பெரிய வாழ்நாள் கணவாக ஒரு நாள் இளையராஜா எனது ஸ்டுடியோவுக்குள் வரவேண்டும் என்பது இருந்தது. அப்போது அவரது புகைபடத்துக்கு அருகில் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும்.
நியாயமான ஆசைகள் நிறைவேற இந்த பிரபஞ்சம் எப்போது வழிவிடும். அதன்படி இறுதியாக என் ஆசை நிறைவேறியுள்ளது என பதிவு செய்துள்ளார். அதில் அவரை கண்ட ரசிகர்கள் ஆளே மாறியிருக்கிறாரே, நன்றாக உள்ளீர்களா, என்ன ஆனது உங்களுக்கு என தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்கள் பதறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.