இணையத்தேடல் என்பது அனைத்து துறையில் பணிபுரிபவர்களுக்கும், ஏனையவர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
முதன் முதலாக டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணணிகளில் இணையத்தேடலானது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் நாளடைவில் மொபைல் சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு அனைவரையும் கவர்ந்திருந்தது.
தற்போது மொபைல் சாதனங்கள் இணையத்தேடலில் புதிய சரித்திரத்தை படைத்துள்ளன.
அதாவது டெக்ஸ்டாப் கணணிகளை விடவும் மொபைல் சாதனங்ளின் ஊடான இணையப்பாவனை முதன் முறையாக அதிகரித்தமையே ஆகும்.
இதன்படி மொபைல் சாதனங்கள் மூலம் 51.3 சதவீதமானவர்களும், டெக்ஸ்டாப் கணணிகள் ஊடாக 48.7 சதவீதமானவர்களும் இணையத் தேடலை மேற்கொள்கின்றனர்.
இதில் ஸமார்ட் கைப்பேசிகளும், டேப்லட்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.