இதுதான் உண்மையான தாய் பாசம்! நெகிழ்ச்சி சம்பவம்

492

இரு கைகளை இழந்த போதிலும் தன் பல்லை வைத்து வயது முதிர்ந்த தன் தாய்க்கு சாப்பாடு ஊட்டி விடும் மனிதரின் வாழ்க்கை சம்பவங்கள் கேட்போரை நெகிழ்ச்சியடைய செய்கின்றது.

Chen Xinyin (48) என்னும் நபர் சீனாவில் வசித்து வருகிறார். இவருக்கு இரு கைகளும் கிடையாது. அவர் ஏழு வயதாக இருக்கும் போது நடந்த மின்சார விபத்து ஒன்றில் தன் இரு கைகளையும் இழந்துள்ளார்.

பின்னர் தனது 20 தாவது வயதில் தனது தந்தையை பறிகொடுத்த அவர் கைகளை இழந்திருந்தாலும் தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தாயாரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது.

கை இல்லாமல் வேலைகள் செய்ய கஷ்டப்பட்டவர் பிச்சை எடுக்க முடிவு செய்தார், குனிந்து கால்களை பார்த்த போது தான், ஏன் நான் தன்னம்பிக்கையை இழக்க வேண்டும்? கால்களை வைத்து தொழிலை தொடரலாமே என நினைத்தார்.

பின்னர் தனது கால்கள் மூலமே சமைப்பது, நிலத்தில் கோதுமை,சோளம் போன்றவற்றை விளைத்து சாகுபடி செய்வது போன்றவற்றை செய்ய பழகி கொண்டார்.

மேலும் உடல் நலிவுற்ற தன் 91 வயதான தாய்க்கு தன் பல்லால் ஸ்பூனை பிடித்து கொண்டு சாப்பாடை ஊட்டி விடவும் செய்கிறார்.

தன்னம்பிக்கை என்ற சொல்லுக்கு இவர் ஆக சிறந்த உதாரணம் என்பதில் சந்தேகமில்லை.

SHARE