இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. மாவைசேனாதிராஜா

255

தமிழரசுக்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி விலகல் தொடர்பாக இன்று  தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய செவியில். மாவைசேனாதிராஜா.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. ஜனாதிபதி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக 19ம் திருத்த சட்டத்திற்கு எதிராகவும் பாராளுமன்றத்தை கலைத்ததும் அதற்கு முன்னரான பெரும்பான்மையை கொண்டிராத ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமித்ததும் ரணில் விக்ரமசிங்கவை அவர்கள் உத்தியோகபூர்வமான பிரதமராக இருந்த போதும் அவரை பதவி நீக்கியதும் உச்ச நீதிமன்றத்தினாலே இவ் விடயம் ஜனாதிபதி; தவறு இழைத்திருக்கின்றார் என்று தீர்ப்பளிக்கபப்பட்டிருந்தது. இந்த நிலைமையில் பாராளுமன்றத்தில் 12ம் திகதி ரணில் விக்ரமசிங்கவை UNF (ஐக்கியதேசிய முன்னணி) பிரதமராக்க வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். அதை விட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சென்ற 14ம் திகதியும் 16ம் திகதியும் நம்பிக்கையில்லை என்ற தீர்மானம் 122 பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்த அடிப்படையில் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தன்னுடைய பெரும்பான்மையை நீருபிக்க தவறிவிட்டார். அதற்கு எதிராக அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்திலே ரணில் விக்ரமசிங்காவை பிரமராக்குவதற்கு 116 வாக்குகள் பெறப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்வது இந்த நாட்டில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையிலும் மக்கள் மத்தியில். ஒரு குழப்பமான அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு அதற்கு பொருத்தமாக பெரும்பான்மையை கொண்டிருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவை பிரதமாராக்க அவர் வழிவிட்டிருப்பது என்பதும் வரவேற்கத்தக்கது.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக்கியதன் பின்புலம் என்னவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என வினவிய பொழுது நாங்கள் இன்னுமொருவரை குற்றம் சுமத்தவில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எடுத்த முடிவுகள் எல்லோருக்கும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது. சென்ற ஜனாதிபதி தேர்தலிலே மஹிந்த ராஜபக்ஷவை 67 இலட்சம் தமிழ் முஸ்லீம் மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளார்கள். அதே நேரம் மைத்திரிபால சிறிசேன அவர்களை தெரிவு செய்திருந்தார்கள். இவ்வாறு தன்னை தெரிவு செய்த மக்களுடைய மனப்பாங்கை பொருட்படுத்தாமல் மைத்திரிபால சிறிசேன மஹிந்தாவை திடீரென்று பிரதமராக்கியது பெரும் தவறாக உச்ச நீதிமன்றத்தினுடைய தவறுகள் வெளிக்காட்டப்படுகின்றது. இதனை நாங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு தவறினை இழைத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும். பிரதமர் மாற்றம் தொடர்பிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்ட பொழுது அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் மஹிந்த அணியுடன் பிரதி அமைச்சர் பதவியை பெற்று இணைந்து கொண்டார்.

இவரை நீங்கள் மீண்டும் உங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா? மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நம்பிக்கை இருந்தது ராஜபக்ஷ அவர்கள் பெரும்பான்மையை நீருபித்துக்காட்டுவார் என்று அதுமட்டுமன்றி பணங்களையும் பதவிகளையும் கொடுத்து பெரும்பான்மையை நீருபிக்க முடியுமென்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்த பொழுது 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தராஜபக்ஷவிற்கு எதிராக தமது பலத்தை நீருபித்துக்காட்டினர். இதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் விலைபோகவில்லை. துரதிஸ்டவசமாக வியாளேந்திரன் மட்டும் விலைபோயுள்ளார். ஆகவே அவரை எமது கட்சிக்கு எடுப்பதாக நாங்கள் தீர்மானிக்கவில்லை புளட் கட்சியும் அவரை தங்களுடைய கட்சியிலிருந்து விலக்கிவிட்டதாகவும் அவரது பாராளுமன்ற பதவியையும் ரத்து செய்வதாகவும் எங்களிடம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகத்தை விளைவித்துள்ளார் என்றும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர்  மாவைசேனாதிராஜா  தெரிவித்திருந்தார்.

SHARE