டெக்ஸ்டாப் கணணிகள் அறிமுகமாகிக்கொண்டிருந்த தருணத்தில் மடிக்கணணிகளின் வருகையானது பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு பிரதான காரணமாக அளவில் சிறியதாகவும், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும் இருந்தமை ஆகும்.
அப்படிப்பட்ட மடிக்கணணயில் தற்போது மற்றுமொரு புரட்சி ஏற்படவுள்ளது.
அதாவது பொக்கெட்டிலே வைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு 7 அங்குல அளவுடைய மடிக்கணணி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
GPD Pocket எனும் குறித்த கணணியை பிரபல நிறுவனமான GPD வடிவமைத்துள்ளது.
இக் கணணியானது IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட GorillaGLASS 3 தொடுதிரையினைக் கொண்டுள்ளது.அத்துடன் Intel Atom x7-Z8700 Cherry Trail Processor, பிரதான நினைவகமாக 4 GB RAM, 7,000 mAh மின்கலம் என்பனவற்றுடன் 128 GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
அடுத்த மாதமளவில் அறிமுகமாகவுள்ள குறித்த மடிக்கணணியானதுWINDOWS 10 அல்லது Ubuntu 16.04 Linux இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.
எனினும் இதன் விலை தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.