இத்தாலியை விடவும் இலங்கையில் மிக மோசமாக கொரோனா பரவும் அபாயம் – மாவை

485

கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அவதியுறும் இந்த நிலையிலே யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்டியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தொடர்பை மேற்கொண்டுள்ளார்.

கேள்வி : நிலைமை எவ்வாறு இருக்கிறது? நீங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கியஸ்தர் என்ற வகையிலும் மக்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டிய கடைமைகள் பல இருக்கின்றது. அந்த அடிப்படையிலே நிவாரணங்கள் சம்பந்தமாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் : மார்ச் மாதத்தில் இந்த கொரோனா வைரஸ் அதாவது கொவிட் – 19 என்ற இந்த தொற்று நோய் உலகம் முழுவதும் தற்பொழுது பரந்து தீவிரமாக அமெரிக்காவிலே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் அண்மித்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு இத்தாலி பிரான்ஸ் பிரித்தானியா போன்ற இடங்களில் பயங்கரமாக இந்த நிலைமை பெருகி கொண்டு இருக்கின்றன. இலங்கையிலும் அந்த சமகாலத்தில் கிட்டத்தட்ட டிசம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதத்திற்குமிடையிலும் இந்த வைரஸ் பற்றிய பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் மிக குறைந்த எண்ணிக்கையினர் தான் இந்த தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் அந்த நோய்யை பற்றி அந்த அடையாளங்கள் கிட்டத்தட்ட 14 நாட்கள் செல்லும் என்ற நிலைமையிலும்; பலர் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அவர்கள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள், கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் மிக அண்மைக்காலத்தில் சென்ற இரு வாரங்களிற்கு இடையில் இலங்கையிலும் பரவலாக பல இடங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டால் கொழும்பு நகர் பிரதேசங்களில் மிகவும் முக்கியமான அலுவலகங்கள் இருக்கின்ற இடங்கள் அங்கு தற்பொழுது அறிந்த நிலைகளைப் பார்த்தால் பண்டாரநாயக்க மாவத்தை என்பது மிகப்பெரும்பாலும் தமிழ் மக்கள் அடர்ந்து வாழுகின்ற பிரதேசங்களாக காணப்படுகின்றன. மாடிக் கட்டடங்களில் இருக்கிறார்கள். அந்த இடத்தில் தற்பொழுது 1000 கணக்கானவர்கள் இந்த தொற்றுக்கு, கொரோனா வைரஸிற்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று தற்பொழுது வடபகுதிகளை நோக்கி அவர்களை கேப்பாப்பிளவு, காங்கேசன்துறை, கொடிகாமம், வவுனியா இந்த பிரதேசங்களில் எல்லாம் அவர்களை கொண்டு வந்து பரிசோதானைக்காக தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். அந்த விடயம் எங்களுக்கு ஒரு செய்தியாக செய்தியாளர்களிடமிருந்து கிடைத்ததே தவிர நான் உடனடியாக அரசாங்க அதிபரிடம் கேட்டேன், அதைவிட மருத்துவர்களிடத்தில் கேட்டேன் அவர்கள் எவருக்கும் அந்த செய்தி தெரியாமல் இருந்தது. ஆனால் இராணுவத்தினர் தற்பொழுது அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்களுக்குரிய தீர்மானங்களே நடவடிக்கைகளில் இருக்கின்றன.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையிலும் இராணுவத் தளபதியாக இருப்பவர் மற்றும் குணத்திலக என்னும் உதவியாளரும் சவேந்திர டி சில்வாவும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கும் வந்தார்கள். அந்த காலத்தில் நாங்கள் அறிந்த வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து இந்த மருத்துவ பரிசோதனைகளிலும் பாதுகாப்பதிலும் இந்த நோயை நிறுத்தி மற்றைய உயிர்களை பாதுகாப்பதிலும் தங்களை அர்ப்பணித்து சேவைகளை செய்யும் சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ்வரனும் அவ்வாறாக நிபுணத்துவம் வாய்ந்த பலர் அதாவது ஊரடங்கு சட்டத்தை தற்பொழுது எடுக்க வேண்டாம் இன்னும் சில வாரங்களுக்கு, ஒருமாதம் அல்லது ஒருவாரத்திற்காவது நீங்கள் தாமதிக்க வேண்டும் என்று அவ்வாறு இருந்தால் தான் மக்களை பாதுகாக்கலாம் என்றும் கேட்டதற்கு பின்னரும் அதற்கு மறுநாள் திங்கட் கிழமையே இந்த ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியிருந்தார்கள். அந்த நாளே பெரியளவில் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களை விட சந்தைப்; பிரதேசங்களிலும் அதைவிட எனக்கு துக்கமான செய்தி இந்த குடிவகைகளை விற்கின்ற இடங்களில் இளம் சமூகம் கூட மிகப் பெரியளவில் கூடியிருந்தார்கள் என்றும் அவர்கள் தெருக்களிலும் கூட தள்ளாடியிருந்தார்கள் என்ற ஒரு செய்தியையும் சொல்லியிருக்கின்றார்கள். அது இந்த கொரோனா வைரஸ் துக்கம் ஊரடங்கு சட்டம் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருக்கும் நேரம், பசி பட்டினி வரப்போகின்றது, வந்துவிட்டது என்று மக்கள் துடித்துக்கொண்டு கண்ணீரும் கம்பளியுமாக இருக்கும் நேரத்தில் அந்த செய்தி எங்களுக்கு மிகவும் மனவருத்தமாகவும் இருந்தது.

அவ்வாறான இந்த நிலைமைகளை ஒரு மருத்துவ உயர் பீடித்தில் இருந்து கொண்டு இந்த பணியில் ஆர்வம் கொண்டு தங்களை அர்ப்பணித்து செய்யும் மருத்துவ சமூகத்தினுடைய கோரிக்கைகள் ……
திடீரென அதாவது ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதில் இருந்து யாழ்ப்பாணத்தை பொருத்தவரையிலும் மேலும் பல இடங்களில் கொழும்பு பிரதேசத்திலும் கூட சந்தைப் பிரதேசமாக இருக்கட்டும் இன்று மிகமோசமாக இந்த கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இன்று கடந்திருக்கும் இரண்டு வாரங்களிற்குள்ளேயே மிக அதிகமான இராணுவத்தினர் கூட குறிப்பாக கடற்படையினர் அல்லது ஒரு உயர்ந்த பீடமாக இருக்கும் சட்டஅதிபர் திணைக்களத்திலே அந்த நோய் பரவி இன்று அதுவே சட்டமா அதிபர் திணைக்களமே மூடப்பட்டுள்ளது.

இன்று இராணுவத்தினர் கூட தங்களை அர்ப்பணித்து இந்த நோயை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதில் உழைக்கிறார்கள் என்றிருந்தாலும் அவர்களுக்கே இந்த அபாயம் வந்திருக்கிறது. ஆகவே அரசாங்கம் இந்த துறையிலே ஆர்வம் கொண்டவர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மருத்துவர்கள் கூறுகின்ற கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்காமல் ஏதோ தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக தேர்ச்சியாக சூழல் வந்துவிட்டது என்பதை காட்டுவதற்காக ஜனாதிபதியும் அவருடைய அமைச்சர்களும் இந்த நடவடிக்கைகளை எடுத்து காண்பிப்பதன் மூலம் தற்பொழுது வருந்துகின்றார்கள் இத்தாலியை நோக்கி இலங்கை செல்லுகின்றது கொரோனா வைரஸிற்கு இந்த மக்கள் இன்று பலியாகப் போகின்றார்கள் என்ற வர்ணனைகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அது கொடூரமான சூழல் இந்த நாட்டிலே ஏற்பட்டிருப்பதை நாங்கள் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.


இரண்டாவதாக இந்தவிடயத்தில் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த மருத்துவ துறையிலே நிபுணத்துவமாக இருப்பவர்கள் அல்லது கற்றல் ஆற்றல் அனுபவமுள்ளவர்கள் கூறுகின்ற கருத்துக்களை இந்த தேர்தல் வெற்றிகளுக்காக என்று இல்லாமல் அவர்கள் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்கள் போன்றவர்களை கூட்டி இந்த கொரோனா வைரஸை எவ்வாறு தடுக்கலாம் என்ற வழி வகைகளை காணவேண்டும்.

அடுத்தததாக அரசியலமைப்பு இன்று தேர்தல் ஆணையகத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலே பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைப்பதிலிருந்து அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையிலும் சட்டபூர்வமான அரசியலமைப்பு ரீதியிலான அதனுடைய……முறைகள்.இவைகள் இன்று மீறி ஜனாதிபதி தான் நினைத்த மாதிரி ஒரு சர்வாதிகார எண்ணத்துடன் தான் நினைத்தவாறே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். உண்மையில் இன்றுதேர்தல் அறிவித்ததில் இருந்து யூன் மாதம் 2 ஆம் திகதிக்கு இடையில் பாராளுமன்றம் கூடும் என்று அறவித்தால் அரசியலமைப்பு செயலிழந்துவிடும். ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை அவர் பயன்படுத்துவதற்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் போய்விடும். 2 ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் இல்லாமல் போய்விடப்போகிறது. இன்று தேர்தல் ஆணையகம் யூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என்று அறிவித்ததே அதற்குள் இன்று கொரோனா வைரஸ் தொற்று எவ்வளவு தூரம் தீவிரமடைந்து பரவப் போகின்றுது என்றவொரு அச்சத்தை மருத்துவ நிபுணர்கள் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சுகாதார நிறுவனம் உலக சுகாதார அமைப்புக்கள் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மிக புத்திசாளித்தனமாக ஆளுகின்ற தரப்பை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாக இருப்பவர் முக்கியத்துவம் வாய்ந்த அனுபவம் வாய்ந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற முக்கிய தலைவர்கள் அனைவரையும் அழைத்து ஒன்றாக ஓரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். அரசியல் நெருக்கடியில்லாமல் இணக்கத்தின் அடிப்படையில் இன்று இருக்கின்ற நீதிமன்றத்திற்கு போய் பாராளுமன்றத்தை கூட்டுவது எப்படி அல்லது இந்த கொரோனா வைரஸை தீர்க்கின்ற வரையிலும் அரசியல் சட்ட நிபுணத்துவ வழிகள் மற்றும் நிதியை கையாளுகின்ற முறைகள் நிதி பற்றாக்குறைகள் இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு முன்பு இருந்த பாராளுமன்றத்தினையே செப்டம்பர் 2 ஆம் திகதி வரைக்கும் அந்த பாராளுமன்றத்திற்கு வருகைதந்தது அந்த பாராளுமன்றத்தையாவது தூக்கி தீர்மானங்களை ஒரு இணக்கத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று இந்த சட்ட நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு வழிகாட்டலைப்பெற வேண்டுமென்று சொன்னால் ஜனாதிபதி அதனை மறுத்து வருகின்றார்.


இதையெல்லாம் விடுத்துவிட்டு இந்த கொரோனா வைரஸ் மனிதகுலத்தை அழித்துவிடுகின்ற இந்த நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதியும் அரசும் அதைவிட எதிர் தரப்பில் இருக்கும் தலைவர்களும் ஒன்று கூடி ஒரு இணக்கத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண வேண்டும். பாராளுமன்ற தேர்தலை எப்படி நடத்த வேண்டுமோ அதை மருத்துவ அடிப்படையில், ஆய்வுகள் அடிப்படையில், நிபுணத்துவத்தின் அடிப்படையில் தீர்மானித்து ஒரு சுமூகமான நிலையில் ஏற்படுத்த வேண்டும். நான் நேற்று மாலையும் கூட இந்த பாடசாலைகளை மே 11 ஆம் திகதி திறக்கப்போகின்றோம், பல்கலைக்கழகத்தை திறக்கப்போகின்றோம் என அறிவித்தல் வந்தது அதைவிட ஓகஸ்ட் மாதத்திலே உயர்தர மாணவர்களுக்குரிய பரீட்சைகள் அதைவிட புலமைபரிசில் பரீட்சைகள் இடம்பெறுவது பற்றி அறிவித்திருந்தார்கள். நான் நேற்று மாலையிலே உயர் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமான் அவர்களுக்கு நான் அனுப்பிய செய்தியின்படி என்னுடன் அவர் ஒருசில நிமிடங்கள் பேச்சு வார்த்தைகள் மேற்கொண்ட பொழுது என்னுடைய பிரதேசத்தின் இந்த பிரச்சனைகளை நான் விளங்கப்படுத்தினேன். தற்பொழுது அவசரப்பட்டு பாடசாலைகளை திறக்காதீர்கள், பரீட்சைபனை நடத்தாதீர்கள் என நான் அவருக்கு விளக்கமாக கூறினேன். அவரும் அதை இணக்கமாக ஏற்றுக்கொண்டு என்னுடன் பேசினார்.

அடுத்ததாகஇன்றுகாலையிலேநான் கொடுத்தசெய்தியின் அடிப்படையில் கல்வி அமைச்சர் அழகப்பெருமான் மிகவும் ஆர்வமாக இருக்கும் பிரச்சனைகள் பற்றி என்னுடன் கலந்து பேசினார். கல்வித்துறையில் நீங்கள் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் அது உங்களுடைய அமைச்சை சார்ந்த தீர்மானத்தை நீங்கள் ஒத்திவைக்க வேண்டும், மாணவர்கள் மிகமோசமாக மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். நாங்களே முழு நாட்களிலும் இந்த கொரோனா பற்றி உலகத்திலே சொல்லப்படுகின்ற செய்திகள் எவ்வளவு தூரம் உலகத்தில் மிகமோசமாக இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் தீவிரமாக பரவப்பட்டு வரும் நோயைப் பற்றி கேட்கும் சந்தர்ப்பங்களில் நாங்களே ஒரு மனஉழைச்சலுக்குள் இருக்கின்றோம். ஆகவே மாணவர்கள் இந்த விடத்தினை எல்லாம் மிக ஆர்வமாக பார்ப்பார்கள் அவர்களது தேர்ச்சியிலே படிக்கும் மனநிலைகளிலே அவர்கள் இருக்கின்றார்களா என பரிசோதிக்கப்பட வேண்டும். பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு முன்னர் தடுப்பு மருந்துகள் கொடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு பொதுவாக இளம் சமூகமாக மாணவ சமூகமாக பல்கலைக்கழகங்களை நடத்தப் போகின்றவர்களை என்கின்ற அனைவரிற்கும் இரத்தப் பரிசோதனைகள் பரீட்சாத்தியமாக செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். இதனால் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். தற்பொழுது கொரோனா வைரஸ் இல்லை அது வராது என்ற நிலைமைகளை தடுப்பூசி கொடுப்பது இரத்த பரிசோதனைகளை நடத்துவது பாதுகாப்பான வழிமுறைகளை அவர்களை பின்பற்றச்செய்வது போன்ற விடயங்களை கல்விச் சமூகத்திற்கும் மாணவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு தடுப்பு மருந்துகளை கொடுப்பதன் மூலம் அவர்களையும் நாங்கள் பாதுகாத்து பாடசாலைகளை திறக்க வேண்டும் என்ற கருத்தை நான் அமைச்சரவை இடத்திலே கூறியிருந்தேன். அவர்கள் அதிலே இறங்கியிருக்கிறார்கள். நாங்கள் அதை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம் எங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளுகின்றோம் என்றும் கூறியிருக்கின்றார்கள். அவர்களிடத்தில் பேசியபொழுது எனக்கு ஆறுதலாக இருந்தது அவர்களும் இந்த விடயத்தினை ஏற்றுக்கொள்ளுகின்றார் என்று.

ஆகவே இந்த விடயத்தில் வடக்குகிழக்கு பிரதேசங்களிலும் சரி இலங்கை முழுவதும் இந்த கொரோனா வைரஸ் எப்பொழுது வரும், யாருக்கு நோய் இருக்கிறது, அவர்களுடைய நோய் தீர்ந்தாலும் மீண்டும் வருகின்றது என்பதை சீனாவிலே கூறியிருக்கின்றார்கள். ஆகவே இந்த காலத்தில் தாங்கள் தன்னிச்சையாக தேர்தலிலே வெற்றிபெற வேண்டும் என்பதற்கான நோக்கத்தைஅல்லதுஅரசியல் நோக்கங்களை எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட அதை தூக்கிவைத்துவிட்டு ஒற்றுமையாக ஒரு அரசியலமைப்பு அந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காணுவதற்கும் இந்த கொரோனா வைரஸை மையமாக கொண்டு நாங்கள் அதை மாற்றியமைப்பதற்கும் தீர்வுகாண்பதற்கும் மீண்டும் மீண்டும் வரக்கூடிய இந்த நோய் அடையாளம் காணமுடியாத அளவிற்கு வரும் என்றும் கூறுகின்றார்கள். இதற்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து மக்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவமளித்து செயற்பட வேண்டும் என்பதைத்தான் இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

SHARE