இந்தியாவில் களமிறங்குகின்றது HTC 10

270

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

அப்பிள் மற்றும் சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு நிகரான கைப்பேசிகளை HTC அறிமுகம் செய்து வருகின்றது.

இதனால் தனது புதிய சாதனங்களின் அறிமுகங்களை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள அந் நிறுவனம் முனைப்பு காட்டி வருகின்றது.

தற்போது HTC 10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அந் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி நாளைய தினம் முதல் இந்தியாவிலும் இக் கைப்பேசி விற்பனைக்கு வரவுள்ளது.

5.2 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் Qualcomm Snapdragon 820 Processor பயன்படுத்தப்பட்டுள்ளது.

தவிர பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

மேலும் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.

SHARE