இந்தியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தனது கிளையை இரகசியமான முறையில், நிறுவியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.
உலகம் முழுவதும் ஐ.எஸ் அமைப்பானது, இரகசியமான முறையில், தமது இலக்குகளை அடைய எத்தணித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு முற்றுமுழுதாகப் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் சுமார் 250 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 300ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ள நிலையில், இது வரையிலும் ஒரு சாதாரணமான நிலையில்லாமல், அசாதாரண சூழ்நிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாக ஐ.எஸ். அமைப்பினர் கூறியுள்ளனர். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய கிளைக்கு அரபு பெயர் “ஹிந்த் இன் வாலே” என பெயரிடப்பட்டு உள்ளது. இந்திய ஊடகங்கள் சில இதனை வெளியிட்டுள்ளது. மேலும், இக்கூற்றை ஒரு மூத்த ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி நிராகரித்தாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.