அப்பிள் நிறுவனத்தின் பிரதான காரியாலயம் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் அமைந்துள்ளது.
ஆனாலும் தனது வியாபாரத்தினை விரிவாக்கும் பொருட்டும், புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் பொருட்டும் பல்வேறு நாடுகளில் அதன் கிளைகள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக மற்றுமொரு கிளையினை தற்போது இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படும் ஹைதராபாத்தில் நிறுவவுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை நேற்றைய தினம் அந் நிறுவனம் விடுத்திருந்தது.
இப் புதிய கிளையின் செயல்பாடாக அப்பிள் மேப் சேவையினை மேம்படுத்துதல், மற்றும் iOS அப்பிளிக்கேஷன்களை வடிவமைத்தலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கு சுமார் 4,000 வரையான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.