தற்போதைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைநீக்கம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு நாடுகளிலும் படிப்படியாக தடைநீக்குமளவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் வலுப்பெற்றிருக்கிறது என்பதனை உணரமுடிகின்ற அதேநேரம் ஏனைய நாடுகளும் விடுதலைப்புலிகளின் தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு தயாராகிவருகின்றன. குறிப்பாக இந்தியா இலங்கையின் அண்மித்த நாடு என்ற காரணத்தினாலும், பண்டமாற்று காலந்தொட்டு நட்புறவினை கொண்ட நாடு என்கின்ற வகையிலும் மீண்டும் விடுதலை இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்பதன் அவசியத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவர்களது அரசியலை கொண்டுசெல்வதற்கு இயக்கங்கள் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையாகவிருக்கின்ற காரணத்தினால் பிரபாகரனின் தலைமையில் அல்லாது வேறொருவரின் தலைமையில் இயக்கங்களை கட்டியெழுப்புவதற்கான முன்னெடுப்புக்களை பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருவதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.