இந்தியாவில் Samsung லேப்டாப்கள் விலை குறைய வாய்ப்பு., நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவு

114

 

கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சம்சுங் (Samsung) மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு முதல் இந்தியாவின் நொய்டா நகரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் மடிக்கணினிகளை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் என்பதால், விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் Samsung Electronics தலைவர் TM Roh தெரிவித்துள்ளார்.

அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் ஆதரவுடன், உற்பத்தி திறன் அதிகரித்து, இதன் ஒரு பகுதியாக இங்கு லேப்டாப்கள் தயாரிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

சம்சுங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய அதன் Samsung Galaxy S24 Series போன்களை இனி நொய்டா தொழிற்சாலையில் தயாரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

நொய்டா சாம்சுங்கின் மிக முக்கியமான உற்பத்தித் தளமாகும். இது சாம்சுங்கின் இரண்டாவது பாரிய தளமாகும். உலகளாவிய தேவைக்கு ஏற்ப அதை மேம்படுத்த ஆலையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என ரோ கூறினார்.

நொய்டா ஆலை feature phones, smartphones, wearable மற்றும் tablet-களை உருவாக்கத் தொடங்கியுள்ளது, இப்போது நிறுவனம் இந்த ஆண்டு லேப்டாப்களை உற்பத்தி செய்யத் தொடங்கும்.

SHARE