இந்தியா உலக கிண்ணத்தை வெல்லுமா என்ற கருத்தை ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

395
 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனாவது கடினம் என நியூசிலாந்து அணி முன்னாள் தலைவர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

தற்போது உலக கிண்ணத்தை வெல்ல போவது யார் என்று முன்னாள் வீரர்கள் பலர் ஆரூடம் சொல்லி வருகிறார்கள்.

உலக கிண்ண தொடருக்கு முன்பாக இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

இந்த போட்டி தொடர் இந்தியாவுக்கு உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட உதவும் என்று அணித்தலைவர் டோனி, வி.வி.எஸ்.லட்சுமணன் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் உலக கிண்ணத்தை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு என்று ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து  வெளியிடுகையில்,

உலக கிண்ணத்தை வெல்ல நான் 4 அணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். முதலில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஏனென்றால் போட்டி தொடர் இந்த நாடுகளில் நடக்கிறது. இது அந்த அணிகளுக்கு சாதகமானது. 3–வது அணியாக தென் ஆப்பிரிக்கா இருக்கிறது. அந்த அணி நல்ல பார்மில் இருக்கிறது.

நான்காவது இடத்துக்கு கடும் போட்டி இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் உள்ளன. அவுஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபடும்.

இந்திய வேகபந்து வீச்சு மோசம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம். வேகப்பந்து வீச்சே முக்கிய பங்கு வகிக்கும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவதே வெற்றியை அடைய உதவும் என்றார்.

SHARE