இந்திய வீரர் கோலிக்கு இலங்கை வீரர் அளித்த பரிசு

125

 

இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வலைப்பந்து பயிற்சியாளர் வெள்ளியிலான துடுப்பு மட்டையை பரிசாக அளித்துள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பஙகேற்பதற்காக இந்திய அணி இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

இன்றையதினம் இந்தியா -பாகிஸ்தான் இடையே முக்கிய ஆட்டம் கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

வெள்ளியிலான துடுப்பு மட்டை
இந்த நிலையில் இலங்கை அணியின் வலைப்பயிற்சி பந்து வீச்சாளர் சந்திரமோகன் கிரிஷா நாத், இந்திய வீரர் கோலிக்கு வெள்ளியிலான துடுப்பு மட்டை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்து சந்திரமோகன் கூறியதாவது: நான் விராட் கோலியின் தீவிர ரசிகன்.அவர்பற்றிய விவரங்களை இந்த வெள்ளி துடுப்பு மட்டையில் பொறித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

SHARE