இந்தோனேசியாவில் கட்டுமானப்பணி நடந்து வந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு கலிமண்டன் மாகாணத்தில் உளள் சமரிந்தா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று ஷின்குவா பத்திரிகை தெரிவித்துள்ளது.
அடுக்குமாடி கட்டிடப்பணி நடந்து கொண்டிருக்கும்போது 3 மாடிகள் திடீரென இடிந்து விழுந்ததாகவும், இதில் 4 பேர் பலியானதாகவும், படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடைபெற்றபொழுது சம்பவ இடத்தில் இருந்த 65 பேர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.