இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை ஆறு குண்டுவெடிப்புச்சம்பவங்களும் துப்பாக்கிபிரயோகங்களும் ஜகார்த்தாவின் பிரபலமான வணிகவளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.குறிப்பிட்ட பகுதியிலேயே பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனடியாக கிடைத்துள்ள புகைப்படங்களில் குண்டுவெடிப்பில் சிக்கிய பலியானவர்களின் இருவரின் உடல்களை காணமுடிகின்றது