ஜகார்தா :இந்தோனேஷியாவில், 120 எரிமலைகளில் ஒன்றான, ‘மவுண்ட் சினாபுங்’ வெடித்து சீறியதால், 4,000 மீட்டர் உயரம் வரை, எரிமலைக் குழம்பு எழுந்தது.இதுகுறித்து, ஷின்குவா பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:இந்தோனேஷியாவின், சுமத்ரா தீவில் உள்ள இந்த எரிமலை, 400 ஆண்டுகளாக உறங்கிய நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், மீண்டும் சீற்றம் கொண்டது.அவ்வப்போது, ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால், 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 30 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, இந்த எரிமலை கடுமையாக வெடித்தது. இதில் வெளியான எரிமலைக் குழம்பு, வானில், 4,000 மீட்டர் உயரம் வரை எழுந்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும், 14,382 பேர் இடம் பெயர்ந்து உள்ளனர்.இவ்வாறு, அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.