செல்பி பிரியர்களுக்காகவே அற்புதமான கைப்பேசிகளை தயாரித்து வழங்கி வருகிறது ஒப்போ நிறுவனம்.
ஒப்போ ஸ்மார்ட்போன்களில் எப்பொழுதும் கமெரா மிகுந்த குவாலிட்டியுடன் தயாரிக்கப்படும்.
இதனாலேயே இந்த ஸ்மார்ட்போன்கள் சந்தை விற்பனையில் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள F1s என்ற ஸ்மார்ட்போனானது மேலே கூறியவாறே செல்பி பிரியர்களுக்கென தனித்துவமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த கைப்பேசியில் மேம்படுத்தப்பட்டுள்ள யூனிக் பிக்சல் அரென்ஞ்சமென்ட் தொழில்நுட்பமானது, உங்கள் செல்பியை பளிச்சென்றும், மிகவும் வளமான இயற்கை நிறங்கள் கொண்டும் பிரகாசமானதாக வழங்கும்.
க்ராப் செய்ய அவசியமே இல்லாத செல்பி பனோரமா முறையும் பொருத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இதனின் அடுத்த அம்சமான தாராளமாக 10,000 க்கும் மேற்பட்ட செல்பிக்கள் சேமிக்க அனுமதிக்கும் ஒரு பாரிய அளவிலான 64ஜிபி உள் நினைவகசேமிப்பும் உள்ளது.
புதியதாக மேம்படுத்தப்பட்ட இந்த ஒப்போ எப்1எஸ் கைப்பேசியானது பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் வண்ணம் அட்டகாசமான சாம்பல் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.