அஜித்-ஷாலினி சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு அழகிய ஜோடி. பிரபலங்களில் முதல் பிடித்த ஜோடி என்றால் பலரும் இவர்களை தான் கூறுவார்கள்.
படங்கள் மூலமே வெற்றி ஜோடி என பெயர் பெற்ற இவர்கள் இணைந்தது ரசிகர்கள் கொண்டாடும் ஒரு விஷயம். அஜித்-ஷாலினியிடம் காதல் பற்றி சொன்ன அழகிய தருணத்தை நேரில் பார்த்த அமர்க்களம் பட புகழ் இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர், அஜித் அவர்கள் காதலை நேரடியாக கூறவில்லை. இவர் என்னிடம் சரண் அவர்களே இந்த படத்தை சீக்கிரம் முடித்துவிடுங்கள், ஏன் சொல்கிறேன் என்றால் இவரை (ஷாலினி) காதலித்து விடுவேனோ என்று பயமாக இருப்பதாக கூறினார்.
அப்படியே என் மற்றொரு பக்கத்தில் பார்த்தால் ஷாலினியின் முகம் ஷாக் ஆகிறது. அவர் அழகாக, கவிதை தனமாக தன்னுடைய காதலை ஓபனாக, நாசுக்காக, ஒழுக்கமாக வெளியே சொன்னார். அது என்னால் மறக்கவே முடியாத தருணம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.