இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா.. இவருடைய மரணம் இந்தியாவை உலுக்கியது

104

 

திரையுலகில் பிரபலமானவர்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அப்படி இந்திய சினிமாவையே உலுக்கிய ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த இவர், தற்போது நம்முடன் இல்லை என்றாலும், நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த திரைப்படங்கள், அதிலும் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலும் இவர் ஹீரோவாக நடித்தது தான் பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் இவருக்கு ரசிகர்களை உண்டாக்கியது.

இவர் தான்
ஆம், அவர் வேறு யாருமில்லை மறைந்த முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தான். இவருடைய சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

2013ஆம் ஆண்டு வெளிவந்த Kai Po Che! படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், Dil Bechara எனும் படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE