சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் தாக்குதல்கள் முஸ்லீம்கள் மீது அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தமிழ் முஸ்லீம் உறவு பற்றியும் ஒற்றுமை ஐக்கியம் பற்றி முஸ்லீம் அரசியல் வாதிகள் பலமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழினத்திற்கு எதிரான விரோதமான செயல்களில் ஈடுபட்டு தன்னை ஒரு முஸ்லீம் இனப்பற்றாளனாக காட்டுவதில் முன்னணியில் இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனும் இந்த தமிழ் முஸ்லீம் ஒற்றுமை பற்றி பேச ஆரம்பித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் படிக்கிறது சிவபுராணம், இடிக்கிறது சிவன் கோவில் என்று. இது அமைச்சர் றிசாத் பதியுதீன் போன்றவர்களுக்கு மிகப்பொருத்தமானதுதான்.
இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை திட்டி தீர்த்து வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மட்டக்களப்பு புல்லுமலையில் முஸ்லீம் மக்களை குடியேற்றும் வைபவத்தில் பேசும் போது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் இருக்கும் தொடர்புகள் மற்றும் உரிமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த சந்தர்ப்பத்திலும் பேச்சுக்களை நடத்த தயாராகவே உள்ளோம் என தெரிவித்திருக்கிறார்.
தமிழ் முஸ்லீம் உறவு என்பது வெறும் பேச்சளவிலோ புட்டும் தேங்காப்பூவும் என்ற அலங்கார வார்த்தைகளிலோ இல்லை. அது நடைமுறையில் காட்டப்பட வேண்டும்.
காலம் காலமாக கிழக்கில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக ஒருவரின் கலாசாரத்தை பண்பாட்டை சமய வழிபாட்டை மதித்து நடந்த காலம் ஒன்று இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்று அது வெறும் பேச்சில் மட்டும் தான் இருக்கிறது. அந்த காலத்தில் அப்படி இருந்தோம் என்று பேசுகிறார்களே தவிர நடைமுறையில் எதிர்மறையாகவே செயற்படுகின்றனர்.
சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களை படுகொலை செய்து அழித்து நசுக்கி வருவது போல முஸ்லீம்களும் தமிழர்களை அழிப்பதிலும் அவர்களின் பண்பாடு கலாசாரங்களை அழிப்பதிலும் போட்டி போட்டுக்கொண்டு முன்னிற்கின்றனர் என்பதற்கு அண்மையில் நடந்த சம்பவத்தை உதாரணமாக தருகிறேன்.
இது நான் கற்பனையில் எழுதும் விடயம் அல்ல. புகைப்பட ஆதாரங்களுடன் வீரமுனையில் உள்ள பல தமிழ் மக்களுடன் உரையாடிய பின் இந்த விடயத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
சம்மாந்துறை போன்ற முஸ்லீம் பிரதேசங்களில் வெட்டப்படும் மாடுகளின் கழிவுகளை வீரமுனை கிராமத்தின் வீதி ஓரங்களில் கொண்டு வந்து வீசிவிட்டு செல்கின்றனர். வீரமுனையில் நூறு வீதம் சைவமக்கள் வாழ்கின்றனர். அயல் கிராமமான சம்மாந்துறை போன்ற முஸ்லீம்கள் வாழும் இடங்களிலேயே மாட்டிறைச்சி கடைகளும் மாடு வெட்டுபவர்களும் உள்ளனர். தினமும் வெட்டப்படும் மாடுகளின் தலைகள், தோல், குடல்கள் மற்றும் கழிவுகளை கொண்டு வந்து வீரமுனை கிராம வீதிகளில் வீசிவிட்டு செல்கின்றனர்.
தினமும் காலையில் எழுந்து பார்த்தால் வீதிகளில் மாட்டு கழிவுகளை தான் காணமுடிகிறது, அதனை நாய்கள் சாப்பிட்டு இழுத்துக்கொண்டு வீடுகளுக்கு வருகின்றன, காகங்கள் குடல்களையும் கழிவுகளையும் கொண்டு வந்து கிணற்றிற்குள்ளும், வீட்டு முற்றத்திலும் போடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வீரமுனை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். வீரமுனை கோவில் கிணறுகளுக்குள்ளும் காகங்கள் மாட்டு குடல்களை போடுகின்றன என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாடு வெட்டும் முஸ்லீம்கள் திட்டமிட்ட இந்த அராஜகத்தையும் அநாகரிகம் மிக்க செயலையும் செய்கின்றனர். தமிழ் மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர்கள் இதனை செய்து வருகின்றனர் என வீரமுனை மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாடு வெட்டுவதையோ அதனை விற்பதையோ தமிழ் மக்கள் ஒருபோதும் எதிர்க்க போவதில்லை. அது முஸ்லீம்களின் ஜனநாயக உரிமை. மாட்டை இறைச்சிக்காக வெட்டினால் அதன் தோல்களையும் கழிவுகளையும் குடல்களையும் தலையையும் உரிய இடத்தில் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அதை புதைக்க வேண்டும். அல்லது எரிக்க வேண்டும்.
இந்துக்கள் என்பதற்காக அல்ல, எந்த ஒரு மனித சமூகமும் இறைச்சி கழிவுகளை தங்கள் முற்றத்தில் கொண்டுவந்து இன்னொருவர் கொட்டுவதை ஏற்றுக்கொண்டு சகித்து கொண்டு இருக்க மாட்டார்கள்.
வீரமுனையை அண்டியுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களுக்கு அசௌகரியத்தையும் தொல்லையையும் துன்பத்தையும் நோய்களையும் கொடுப்பதற்காக திட்டமிட்ட வகையில் வீரமுனை தமிழ் கிராமத்தில் கொண்டு வந்து மாட்டு கழிவுகளை கொட்டுகின்றனர். இது தமிழ் மக்களை பழிவாங்குகின்ற செயல் மட்டுமல்ல, அம்மக்களை அந்த கிராமத்திலிருந்து விரட்டி அடிக்கின்ற செயலும் ஆகும்.
1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.
அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர்.
வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.
20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை
05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை
10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .
16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.
26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே.
தமிழர்களை வெட்டி கொலை செய்து கொடுமைகளை புரிந்த முஸ்லீம்கள் இன்று மாடுகளை வெட்டி அதன் கழிவுகளை வீரமுனை கிராமத்திற்குள் வீசிவிட்டு செல்கின்றனர்.
முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதற்கோ பன்றிகளை வெட்டுவதற்கோ குரங்குகளை வெட்டி சாப்பிடுவதற்கோ தமிழர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். நீங்கள் மாடுகளையோ குரங்குகளையோ வெட்டி தின்னுவதற்கு முதல் அதன் கழிவுகளை பக்குவமாக மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையில் புதைத்து விட்டு செல்ல வேண்டும், இதை விடுத்து கழிவுகளை அடுத்த ஊருக்குள் கொண்டு சென்று வீசிவிட்டு வரும் கழிவு வேலைகளை நிறுத்த வேண்டும் என வீரமுனை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையிடம் பல முறை முறைப்பாடு செய்தும் அவர்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தினம் தினம் இந்த அராஜகம் தொடர்வதாகவும் வீரமுனை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை பிரதேச சபை தலைவர் பிரதி தவிசாளர் என அனைவரும் முஸ்லீம்கள், அவர்கள் வீரமுனை தமிழ் கிராமத்தில் மாட்டு கழிவுகள் வீசப்படுவதை தடுக்க மாட்டார்கள். காரணம் அது தமிழ் கிராமம்.
கிழக்கை பொறுத்தவரை முக்கியமாக அம்பாறையை பொறுத்தவரை தமிழ் மக்கள் அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆட்சியாளர்களுடன் ஒட்டியிருக்கிறோம் என்ற அதிகார மமதையில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமிழர்களை அடிமைகளாகவே நடத்துகின்றனர்.
ஒரு புறம் தமிழ் மக்களுக்கு எதிராக அராஜகங்களை புரிந்து கொண்டு மறுபுறத்தில் தமிழ் முஸ்லீம் இன ஐக்கியத்தை எப்படி பேச முடியும்.
முதலில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்களை முஸ்லீம்கள் நிறுத்த வேண்டும். அதை நிறுத்தாத வரை தமிழ் முஸ்லீம் இன ஐக்கியம் பற்றி பேசுவதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் இல்லை.