இனவாதத்தை முறியடித்து அரசியல் தீர்வை முன்வைப்போம்-தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்­றத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்­களா?

308

 

தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்­றத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்­களா? என்ற ஐயம் தோன்­று­ம­ள­வுக்கு அண்மைக் காலத்தில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்­க­ளது கருத்­துக்­களும் உரை­களும் அமைந்து காணப்­ப­டு­கின்­றன என்ற கருத்து தமிழ் மக்கள் மத்­தியில் உருவாகியுள்ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முதலமைச்­சர்­களின் 32 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் பின்­வரும் கருத்­தொன்றை தெளி­வாகக் கூறி­யி­ருந்தார். ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரத்தைப் பர­வ­லாக்கி ஒரே நாடு என்ற சித்­தார்ந்­தத்தில் நாம் அனை­வரும் இணைந்து எமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வோம் என ஜனா­தி­பதி அழுத்­த­மாகக் கூறி­யி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியின் இக்­க­ருத்­தா­னது மறை­மு­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் எதைக்­கூ­று­கின்­ற­தென்றால் சமஷ்­டி­யென்ற ஆட்­சி­மு­றைக்கு நாம் செல்­லப்­போ­வ­தில்லை. ஒற்­றை­யாட்­சியின் கீழ் எவ்­வாறு அதி­கா­ரத்தை மேலும் பர­வ­லாக்­கு­வது பலப்­ப­டுத்­து­வது. தற்­போது புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் முயற்­சி­களை மேற்­கொண்டு இதன்­போது மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்­களை பர­வ­லாக்­கு­வது தொடர்பில் அதிக கவனம் செலுத்­தப்­ப­டு­மென ஜனா­தி­பதி சூளு­ரைத்­துள்ளார்.

ஒற்­றை­யாட்சி முறைக்குள் உள்­ள­டங்­கிய தீர்­வொன்­றையே நாங்கள் கொண்­டு­வ­ருவோம் என்ற கருத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவும் தான் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற காலத்­தி­லி­ருந்து பகி­ரங்­க­மாக கூறி­வந்­தி­ருக்­கிறார்.

இது­வரை நாளும் சமஷ்டி முறை பற்­றியோ மாகாண அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் பற்­றியோ வெளிப்­ப­டை­யாக வாய் திறந்து கூறாத ஜனா­தி­ப­தி­ மேற்­படி மகா­நாட்டில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அந்த வெளிப்­ப­டுத்­தலின் மூலம் அவர் தமிழ் மக்­க­ளுக்கும் கூட்­ட­மைப்­புக்கும் ஏனைய தமிழ்த் தரப்­பி­ன­ருக்கும் விடுத்­தி­ருக்கும் அல்­லது தெரி­வித்­தி­ருக்கும் செய்­திகள் என்­ன­வென்றால் சமஷ்டி முறைக்கு நாம் எக்­கா­ரணம் கொண்டும் செல்லப் போவ­தில்­லை­யென்­பதே இன்­னொரு செய்தி. மாகாண சபை முறை­க­ளி­னூ­டா­கவே அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­ப­டு­மென்ற முடி­வான செய்­தியை பூட­க­மாக வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

இத்­த­கைய கருத்­துக்­களும் செய்­தி­களும் வடக்கு கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கு சந்­தே­கங்­க­ளையும் சஞ்­ச­லங்­க­ளையும் உண்­டாக்கி வரு­வ­துடன் மீண்டும் ஏமாறப் போகின்­றோமா என்ற ஐயப்­பா­டு­களை உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கி­றது என புத்­தி­ஜீ­விகள் கருத்து தெரி­வித்து வரு­கி­றார்கள்.

நல்­லாட்­சியின் கார­ண­கர்த்தா என்று கூறப்­ப­டு­கின்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி தேர்தல் காலத்­திலும் பொதுத் தேர்தல் பிர­சா­ரத்தின் போதும் அடக்கி வாசித்து விட்டு தற்­பொ­ழுது இதுதான் தீர்­வாக முடி­யு­மென ஆவே­சத்­துடன் கூறி­வ­ரு­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ காலத்­தி­லேயே 13 ஆவது திருத்­தத்­துக்கு அப்பால் சென்­றாலும் நாம் ஏற்கப் போவ­தில்லை சுய­நிர்­ண­யத்தை அனு­ப­விக்­கக்­கூ­டிய சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்­வொன்­றையே நாம் எதிர்­பார்த்து நிற்­கின்றோம் என்று கூறி­வந்த தமிழ் தலை­மைகள் ஆட்சி மாற்­றத்தைக் கொண்­டு­வ­ர­வேண்­டு­மென கடு­மை­யான பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்­டதை அனை­வரும் அறிவர்.

அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் ஒற்­றை­யாட்சி முறை­யி­லான அர­சியல் அதி­கா­ரப்­ப­கிர்­வையே எம்மால் தர­மு­டி­யு­மென பிர­த­மரோ அல்­லது ஜனா­தி­ப­தியோ வடக்கு கிழக்கு தமி­ழர்­க­ளிடம் கூறி வாக்குக் கேட்­டி­ருப்­பார்­க­ளே­யானால் சில­வே­ளை­களில் நல்­லாட்­சிக்­கான வித்து இடப்­ப­டாமல் இருந்­தி­ருக்­கலாம்.

தமிழ் மக்­களின் ஆறு தசாப்த காலப்­போ­ராட்­ட­மா­னது ஒற்­றை­யாட்சி முறை­யி­லான தீர்­வொன்றை இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக பெற­மு­டி­யு­மென அவர்கள் நம்­பி­யி­ருப்­பார்­க­ளே­யானால் அன்­றைய அகிம்சை போராட்டம் தொட்டு ஆயுதப் போராட்­டத்­தி­னூ­டாக வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள ராஜ­தந்­திரப் போராட்டம் தற்­போ­தைய நல்­லாட்சிப் போராட்டம் வரை அர்த்­த­மற்ற போராட்­ட­மா­கவே நினைக்­கப்­பட வேண்டும்.

ஒற்­றை­யாட்சி முறை­யொன்­றி­னூ­டாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண­மு­டி­யு­மென அன்­றைய தலை­வர்­களும் இன்­றைய தலை­வர்­களும் நம்­பி­யி­ருப்­பார்­க­ளே­யானால் சோல்­பரி யாப்பை அதன் பின்­னே­வந்த குடி­ய­ரசு யாப்பை மீண்டும் வரை­யப்­பட்ட ஜே.ஆரின் சோச­லிச யாப்பை விமர்­சிக்க வேண்­டிய அவ­சி­ய­மி­ருந்­தி­ருக்­காது.

பழைய குருடி கதவைத் திற­வடி என்­ப­துபோல் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை புதிய அர­சியல் யாப்பின் மூலம் கொண்­டு­வர முடியும். இந்த நாட்­டுக்­கென வரை­யப்­ப­ட­வேண்­டிய யாப்­பா­னது எவ்­வகை முறையும் அதி­காரப் பகிர்வு கொண்­ட­தாக இருக்க வேண்­டு­மென்ற மக்கள் கருத்துக் கோர­லையோ ஆலோ­ச­னை­யையோ பெற­வேண்­டிய தேவை ஏன் எழ வேண்­டு­மென்ற கேள்வி எழுந்து நிற்­கி­றது எனப் பேசப்­ப­டு­கி­றது.

அண்­மையில் நாடு பூரா­கவும் சென்று புதிய யாப்­புக்­கான மக்கள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் அர­சியல் தலை­வர்­களின் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­று­வந்த குழு­வி­ன­ரிடம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து தரப்­பி­னரும் இரண்டு விட­யங்­களை வலி­யு­றுத்தி கூறி­யி­ருந்­தார்கள். ஒன்று நீண்­ட­கால அர­சியல் பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்­டு­மாக இருந்தால் சமஷ்டி முறை­யி­லான தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும். மற்­றது தமிழர் தாய­க­மென அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் வகையில்

வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்தை ஏக முடி­வாகக் கூறி­யி­ருந்­தார்கள். இதற்கு மாற்றுக் கருத்து இருக்­க­வில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் வாழ்ந்து கொண்டு எந்த சேதா­ரமும் இல்­லாத ஒரு சிலர் ஒரு சில அமைப்­புக்கள் சுய­ந­லப்­பாங்­காக இந்த கருத்­துக்­க­ளுக்கு எதிர்க்­க­ருத்து முன்­வைத்­தது முண்டு.

தமிழ் மக்­களை குறிப்­பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்­களைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி, தமிழ் மக்கள் பேரவை என்ற கட்­சி­க­ளா­யினும் சரி அமைப்­புக்­க­ளா­யினும் சரி இவ்­விரு கோட்­பா­டு­க­ளி­லி­ருந்து அவர்கள் விலத்திச் செல்­ல­வில்­லை­யென்­பது தெளிவு நிலை­யான உண்மை.

இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது நீண்­ட­கால இலக்­கி­லி­ருந்து எக்­கா­ரணம் கொண்டும் விலத்திச் செல்­ல­மு­டி­யாத அள­வுக்கு மக்­களின் அழுத்­தங்­களும் அபி­லா­ஷை­களும் பின்­னணி வகிக்­கின்­றன என்­பது யதார்த்தம். ஒற்­றை­யாட்சி முறை­யொன்றின் கீழேயே அர­சியல் தீர்வு வழங்­கப்­படும் அதி­காரப் பகிர்வு மேற்­கொள்­ளப்­படும். மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்­களைப் பெருக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை எட்­ட­மு­டி­யு­மென ஜனா­தி­பதியும் பிர­தமரும் கூறிக் கொண்­டு­வ­ரு­வதன் முழு அர்த்­தப்­பா­டு­க­ளையும் எவ்­வாறு மதிப்­பீடு செய்ய முடி­யு­மென்­பதே தமிழ் மக்கள் இன்று சஞ்­ச­லப்­ப­டு­வ­தற்­கான கார­ண­மாகப் பார்க்­கப்­ப­ட­வேண்டும்.

ஒற்­றை­யாட்சி முறை­யொன்றின் கீழ் அர­சியல் தீர்வும் அதி­கா­ரப்­ப­கிர்வும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மாயின் இப்­பொ­ழுது நடை­மு­றை­யி­லுள்ள அர­சியல் சாச­ன­மா­னது போது­மான வலி­மைத்­தன்மை கொண்­ட­தா­கவே இருக்­கி­றது. வெறு­ம­னையே நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைத்துக்கொள்­வ­தற்­கா­கவும் தேர்தல் முறையில் மாற்ற முறை­மையை உண்­டாக்­கு­வ­தற்­கா­கவும் பாரா­ளு­மன்றை அதி­கார செறி­வு­டை­ய­தாக மாற்­று­வ­தற்­கா­கவும் புதிய அர­சியல் சாசனம் கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­ற­தெனில் சிறு­பான்மை சமூ­கத்தின் நலன் சார்ந்த விட­யத்­துக்­காக புதிய அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­ப­ட­வில்­லையா என்ற கேள்வி எழு­கின்­றது. அது­வு­மன்றி அவ­சரம் அவ­ச­ர­மாக கருத்துக் கோரல் ஏன் தேவைப்­ப­டு­கி­றது? என்­பது புரி­யாத விட­ய­மா­க­வே­யுள்­ளது.

கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வரை அவர்­களால் முன்­வைக்­கப்­பட்டு வந்த விடயம் யாதெனில், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்று காணப்­ப­ட­வேண்­டு­மாயின் சமஷ்டி முறை­யி­லான தீர்­வொன்று முன்­வைக்­கப்­பட வேண்டும். சமஷ்­டி­யென்ற வார்த்தைப் பிர­யோகம் தெற்கில் வாழு­கின்­ற­வர்­க­ளுக்கு சிம்ம சொப்­ப­ன­மாக இருக்­கு­மாயின் அதா­வது தெற்­கி­லுள்ள மக்­க­ளுக்கு அச்­சத்தைத் தரு­மாயின் அதற்கு மாற்­றீ­டான மொழிப்­பி­ர­யோ­கமோ அல்­லது ஆட்சி முறையை முன்­வை­யுங்கள் என்று கூறி­வ­ரு­கின்­றார்கள். அவர்கள் தமது கோரிக்­கைக்கு வலுச்­சேர்க்கும் முறையில் இவற்­றையும் கூறி­வ­ரு­கி­றார்கள்.

சமஷ்டி கோரு­வ­தனால் நாடு அச்சம் கொள்ள வேண்­டி­ய­தில்லை. பிள­வு­ப­டாத ஒன்­று­பட்ட நாட்­டுக்குள் சுயாட்சி முறை­யி­லான தீர்வு முறை­யையே நாம் கோரி நிற்­கின்றோம். எமது கோரிக்­கை­யினை அனைத்து சமூ­கமும் முரண்­ப­டாத வகையில் அங்­கீ­க­ரித்து நீண்ட சமா­தா­னமும் நல்­லி­ணக்­கமும் ஏற்­பட வழி­ச­மைத்துத் தாருங்­க­ளென்றே கூறி வரு­கின்­றார்கள்.

நாங்கள் ஈழம் என்ற கோரிக்­கையை கைவிட்டு விட்டோம். நாடு பிள­வு­ப­டு­வதை விரும்­ப­வில்லை. அனைத்து சமூ­கத்­து­டனும் ஒற்­று­மை­யா­கவே வாழ விரும்­பு­கின்றோம். ஆனால் எமது சுய­நிர்ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். சுயாட்சி வலிமை கொண்ட தீர்வை பெற விரும்­பு­கின்­றோ­மென வலி­யு­றுத்­தி­வ­ரு­வது யாவரும் அறிந்த உண்மை. அது மட்­டு­மன்றி சர்­வ­தேச தலை­வர்­க­ளையோ தூது­வர்­க­ளையோ ராஜ­தந்­தி­ரி­க­ளையோ சந்­திக்­கின்ற வேளை­க­ளி­லெல்லாம் அவர்கள் இதையே வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள். வெளிநாடு­க­ளுக்குப் பய­ணங்­களை மேற்­கொண்டு கூறி­வ­ரு­வ­து­முண்டு.

த.தே.கூ. அமைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அண்­மைக்­கா­ல­மாக கூறி­வ­ரு­கின்ற இன்­னு­மொ­ரு­வி­டயம் இவ்­வ­ருட இறுதிக்குள் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அப்­பொ­ழுதான் மீள்­கு­டி­யேற்றம், மறு­வாழ்வு, அர­சியல் கைதிகள் விவ­காரம் காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சி­னைகள் சமூக மற்றும் வேலை­யற்றோர் பிரச்­சி­னைக்கு விரை­வா­னதும் உறு­தி­யா­ன­து­மான முடி­வு­க­ளையும் காண முடியும். தவறும் பட்­சத்தில் எல்­லாமே சூனி­ய­மா­கி­வி­டு­மென சம்­பந்தன் எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும் கூறி­வ­ரு­வதை அவ­தா­னிக்­கின்றோம்.

மாகாண சபை முறை­யொன்றின் அதி­கா­ரச்­செ­றிவை வலு­வ­டைய வைப்­பதன் மூலம் இவை­யெல்­லா­வற்­றையும் அடைந்து விட­லா­மென்ற நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் கூறப்­பட்ட விட­ய­மாக இதை அர்த்தம் கொள்ள முடி­யாது. இவை­யெல்­லா­வற்­றுக்கும் அப்பால் ஒரு நீண்ட பயணம் உள்­ளது என்­பதே அதன் முழு­மை­யான கருத்­தாக நம்­பப்­ப­ட­வேண்டும்.

மாகா­ண­சபை அதி­கா­ரங்­களை பர­வ­லாக்­கு­வதன் மூலமும் பலப்­ப­டுத்­து­வதன் மூலமும் நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கோ தேசியப் பிரச்­சி­னைக்கோ தீர்வு கண்­டு­வி­ட­லா­மென அர­சாங்கம் நினைக்­கு­மாக இருந்தால் அதை எந்­த­ள­வுக்கு தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள் சாத்­தி­ய­மாகுமா என்ற கேள்வி எழுந்து நிற்­கின்­றது.

மாகா­ண­சபை முறை­யொன்று இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட காலத்­தி­லி­ருந்து இதன்­மீது நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக தமிழ் மக்­களும் காணப்­ப­ட­வில்லை. மித­வாதக் கட்­சி­களும் இதை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இந்­தி­யா­வினால் வலிந்து புகுத்­தப்­பட்ட இம்­மு­றையை விடு­தலை இயக்­கங்­களும் முழு­மை­யாக அங்­கீ­க­ரிக்­க­வில்லை. ஏற்­றுக்­கொண்­ட­தாக நம்­பப்­பட்ட அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் கடு­மை­யாக விமர்­சித்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டு அதன் முத­லா­வது முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றுக்­கொண்ட வரத ராஜப்­பெ­ருமாள், அதன் பின்னே கிழக்கு பிரிக்­கப்­பட்டு கிழக்கு மாகாண முதல் அமைச்­ச­ராக ஆக்­கப்­பட்ட சிவ­நேச­துரை சந்­தி­ர­காந்தன் தற்­போ­தைய கிழக்கின் முதல் அமைச்சர் நஸீர் அஹமட் வரை மாகாண சபை­களின் அதி­கா­ரங்கள் வலி­தாக்­கப்­ப­ட­வேண்டும். பர­வ­லாக்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற கருத்தை முன்­வைத்து வந்­துள்­ளார்கள். இவற்­றுக்கு மேலாக

வட­மா­காண முதல் அமைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் தான் பத­வி­யேற்ற காலத்­தி­லி­ருந்து அதி­காரப் பர­வ­லாக்கல் பற்றி கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வந்­துள்ளார். தொடர்ந்தும் முன்­வைத்து வரு­கின்றார்.

இவை­யொரு புற­மி­ருக்க மாகாண சபை­களின் அதி­காரப் போக்குப் பற்றி அண்­மையில் கருத்துத் தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தற்­போ­தைக்கு மாகாண சபைகள் வெள்­ளை­யா­னை­யென்றே வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. மாகாண சபை­களின் எந்­த­வொரு திட்­டமும் முன்­னெ­டுக்­கப்­ப­டாமல் உள்­ளன. இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் மீது புதிய அர­சியல் அமைப்பில் கவனம் செலுத்­தப்­படும்.

ஒவ்­வொரு அமைச்­சரும் அர­சாங்­கத்தைச் சேர்ந்­த­வர்­களும் மாகா­ண­சபை முறை பற்­றியும் அதன் அதி­காரப் பல­வீ­னங்கள் பற்­றியும் சாடியும் விமர்­சித்து வந்­தாலும் உள்­ளொன்று வைத்து புறத்­தே­யொன்றை பேசு­கின்­ற­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள்.

மாகா­ண­சபை முறை­மையின் அதி­கா­ரங்­களும் வலுவும் பலப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மாயின் பல்­வேறு துறை­களில் அது பலப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென்ற கருத்து கூறப்­பட்டு வரு­கின்­றதே தவிர அதை நடை­மு­றைக்கு கொண்­டு­வர யாரும் துணிவு கொள்­ள­வில்லை. உதா­ர­ண­மாக பொலிஸ் அதி­காரம், காணி அதி­காரம் சம்பந்­த­மாக கடந்த 27 வரு­டங்­க­ளாக பேசப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. ஜே.ஆர். அதன் பின்னே பிரே­ம­தாஸ, சந்­தி­ரிகா, மஹிந்த ராஜபக்ஷ என எல்லா ஜனா­தி­ப­தி­க­ளாலும் நடப்பு ரீதியாக இவ்விரு அதிகாரங்கள் பற்றி பேச்சளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும் நடைமுறையில் அவர்கள் அமுல்படுத்துவதற்கு காட்டி வருகின்ற தயக்கமும் தாமதமும் அறியப்பட்ட விடயமே. இவ்விரு அதிகாரங்களையும் வழங்குவதன் மூலம் அது வட கிழக்கில் தனி ராஜ்ஜியத்துக்கு இட்டுச் சென்று விடும் மத்திய அரசின் அதிகார வாண்மை பலவீனப்படுத்தப்பட்டுவிடும். நினைத்த குடியேற்றங்களையோ சுவீகரிப்புக்களையோ மத்திய அரசு செய்ய முடியாமல் போய்விடுமென்ற உள்நோக்கம் கருதியும் தமது ஆட்சிக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றியும் கருதியே செய்யாமல் இருந்துள்ளார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் இனவாதத்தை முறியடித்து அரசியல் தீர்வை முன்வைப்போம் என்று அரசு சார்ந்த ஒருசாராரும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியாது என இன்னொரு சாராரும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் ஒற்றையாட்சி முறையினூடாக மாகாணங்களுக்கு அதிகாரம் ஒற்றையாட்சி எவ்வாறு பரவலாக்குவது வலுப்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என பிரதமரும் ஜனாதிபதியும் கூறிவருகிறார்கள்.

இத்தகையதொரு கருத்தும் முன்னெடுப்புக்களும் தமிழ் மக்கள் மத்தியில் சஞ்சலத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னைய அரசாங்கங்களினால் எல்லாக் காலத்திலும் ஏமாற்றப்பட்டதைப் போல் மீண்டும் ஒரு ஏமாற்றத்தை நோக்கி தமிழ் மக்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்னதான் முடிவை நாம் சந்திக்கப் போகிறோமென்ற சந்தேகங்களே அவர்களை மீண்டும் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

SHARE