இனிப்பான கரும்பு சாறு பொங்கல்

380
பொங்கல் ஸ்பெஷல்: இனிப்பான கரும்பு சாறு பொங்கல்

கரும்பு சாறு பொங்கல்
தேவையான பொருட்கள்
கரும்பு சாறு – 1 லிட்டர்
அரிசி – அரை கப்
நெய் – விருப்பத்திற்கு ஏற்ப
சுக்கு – சிறிதளவு
முந்திரி – 1 கைப்பிடியளவு
திராட்சை – 1 கைப்பிடியளவு
பால் – அரை கப்
செய்முறை
சுக்கை நன்றாக பொடித்து கொள்ளவும்.
கடாயில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும். பிறகு கரும்பு சாறை கொதிக்க விடவும். கரும்பு சாறு கொதிக்கும் போது அதனுடன் பாலை சேர்க்கவும்.
இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் பால் கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். அரிசி மென்மையாக மாறும் வரை வேக விடவும். நன்றாக வெந்ததும் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, சுக்குத்தூள சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது இனிப்பான கரும்பு சாறு பாயாசம் தயார்.
SHARE