புதிதாக அறிமுகமான வாட்ஸ் அப் அம்சத்தின் மூலம் அட்மின் அனுமதி இல்லாமல் மிக சுலபமாக வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து கொள்ள முடியும்.
Beta Application Android 2.16.281 மேம்படுத்தப்பட்ட பதிப்பு உடன் iOS பயனர்களுக்கு இந்த வாட்ஸ்ஆப் அப்டேட் ஆனது கிடைக்கப்பெறுகிறது.
இதற்கு முதலில் வாட்ஸ் அப் பீட்டா வெர்சனை அப்டேட் செய்து கொள்ளவும்.
அடுத்ததாக எந்த குரூப்பில் இணைய இருக்கிறோர்களோ அதற்கான Invite Link-யை எடுத்துக் கொள்ளவும்.
இதன் பின்னர், நீங்கள் குறிப்பிட்ட குழுவில் இணைய விரும்புகிறீர்களா என்ற அறிவிப்பு கிடைக்கும்.
அடுத்ததாக அட்மின் பெயர், எத்தனை மெம்பர்கள் உள்ளனர் என்ற தகவல்கள் காட்டப்பெறும்.
அடுத்து இணைந்து கொள்ள வேண்டுமா என்று கேட்கும், இதை கிளிக் செய்தால், அது தானாகவே சரிபார்ப்புகளை நிகழ்த்த தொடங்கும்.
ஒருமுறை வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பின்பு நீங்கள் இறுதியாக குழுவில் இணைவீர்கள்.