தீவிரவாத தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு, விமானியின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வருவது பயணிகளின் பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
எம்.ஹெச்-370 என்றாலே விமான பயணிகளிடையே இனம் புரியாத சோகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மாயமானமான மலேசிய விமானம், விமானப்பயணிகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொறியாளரான ட்ரென்கோ விளாதிமிர் நிகோலேவிச் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக போராடி ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் விமான விபத்துக்களே இருக்காது என உறுதி கூறுமளவுக்கு இவரது கண்டுபிடிப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.