மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பிரபல இணைய உலாவியான Internet Explorer இற்கான அப்டேட் மற்றும் சேவைகளை இன்றுடன் நிறுத்திக்கொள்ளப்போவதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இதன்படி 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதியுடன் Internet Explorer 8, 9 மற்றும் 10 என்பவற்றிற்கான சேவைகள் மற்றும் அப்டேட்கள் நிறுத்தப்படவுள்ளன.
எனினும் விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட Microsoft’s Edge இணைய உலாவியிற்கான அப்டேட் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே Internet Explorer இணைய உலாவியினைப் பயன்படுத்திவருபவர்கள் Google Chrome அல்லது Firefox அல்லது Microsoft’s Edge ஆகியவற்றுள் ஏதாவது ஒரு இணைய உலாவியினை கணினியில் நிறுவிக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. |