நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவியில் இருந்து நீக்குதல் உட்பட 4 கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு நேற்று காலை கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு வழங்கி நேற்று கத்தோலிக்க சபையின் பிரதிநிதியான ராகம பிரதேசத்தை சேர்ந்த மென்ப்ருட் அந்தோனி என்பவரும் இணைந்துள்ளார்.
நேற்று இரவு தேரர் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.